உச்ச நீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட புதிதாக 9 நீதிபதிகள் நியமனம்; மத்திய அரசு ஒப்புதல்

Centre clears all 9 names sent by Collegium for Supreme Court Tamil News: காலியாக உள்ள 10 உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 9 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Supreme Court news in tamil: Govt clears all 9 names sent by Collegium for SC

India news in tamil: டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உள்ள நிலையில், தற்போது 24 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், காலியாக உள்ள 10 நீதிபதிகளின் இடங்களுக்கு, நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட கொலீஜியம் அமைப்பானது 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரின் பெயர்களை பரிந்துரைத்தது.

கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்த நீதிபதிகள் பட்டியலில், கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஷ்வரி, தெலங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஹிமா கோலி, கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி பி.வி.நாகர்த்தனா, கேரள ஐகோர்ட்டு நீதிபதி சி.டி.ரவிகுமார், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரின் பெயர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து நேரடி நியமன அடிப்படையில், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அரசு கூடுதல் வழக்கறிஞருமான பி.எஸ்.நரசிம்மாவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காலியாக உள்ள 10 நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த 9 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது எனவும், தொடர்ந்து இந்த பட்டியல் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் முக்கிய அதிகாரி ஒரு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், “எல்லாம் சரியாக நடந்தால், அடுத்த வார தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 10 இடங்களும் நிரப்பப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பி.வி.நாகர்த்தனா உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் தலைமை நீதிபதி இ எஸ் வெங்கடராமையாவின் மகளான பி.வி.நாகர்த்தனா பெங்களூருவில் வணிகச் சட்டம் தொடர்பாக பயிற்சியை மேற்கொண்டவர்.
2008 ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ளார்.

கடந்த 2019ல் நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றதையடுத்து வேறு எந்த நியமனமும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Supreme court news in tamil govt clears all 9 names sent by collegium for sc

Next Story
இந்தியாவை நம்பி டெல்லி வந்த ஆப்கான் எம்.பி., துருக்கிக்கு திருப்பி அனுப்பிய அதிகாரிகள்Afghanistan crisis Afghan woman MP Rangina Kargar
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com