Advertisment

’இலவசங்கள்’ குறித்த தேர்தல் வாக்குறுதிகள்; மத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இலவசங்கள் வழங்குவதாக குறிப்பிடும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த வழக்கு; மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

author-image
WebDesk
New Update
Tamil news, tamil nadu news, 10.5% reservation, Madurai Branch Chennai High Court

உச்ச நீதிமன்றம்

SC issues notice to Centre, EC on PIL against poll promises of ‘freebies’: தேர்தலுக்கு முன் பொது நிதியில் இருந்து "பகுத்தறிவற்ற இலவசங்களை" வழங்குவதாக வாக்குறுதியளிக்கும் அல்லது பரப்பும் அரசியல் கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்க அல்லது பதிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, “இது ஒரு தீவிரமான பிரச்சினை மற்றும் இலவச பட்ஜெட் வழக்கமான பட்ஜெட்டை விட அதிகமாக உள்ளது. இது ஒரு ஊழல் நடைமுறை இல்லை என்றாலும், அது ஒரு சீரற்ற தேர்தல் களத்தை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டது.

 “நீங்கள் (மனுதாரர்) உங்கள் அணுகுமுறையில் (கட்சிகளை குறிப்பிடுவதில்) தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கிறீர்கள் என்று நீதிபதி கோஹ்லி குறிப்பிட்டார். “பிரமாணப் பத்திரத்தில் இருவரை மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்கள்” என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பஞ்சாப் தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி 18 வயதுடைய ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 என்ற வாக்குறுதியை அளித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இது போன்ற உதாரணங்களும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அவை, “சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) ஒவ்வொரு பெண் வாக்காளர்களின் வாக்குகளை கவர்ந்திழுக்க ரூ.2000 தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது. அதன்பிறகு, ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 8 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது மட்டுமின்றி, கல்லூரிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஸ்கூட்டி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.20,000, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.15,000, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.10,000 மற்றும் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.5,000 என வாக்குறுதி அளித்துள்ளது.”

கடைசியாக, “உ.பி., சட்டசபை தேர்தலில், 12ம் வகுப்பு படிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஸ்மார்ட்போன், பட்டப்படிப்பு படிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஸ்கூட்டி, பெண்களுக்கு இலவச பொது போக்குவரத்து, ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் ஆண்டுக்கு 8 இலவச கேஸ் சிலிண்டர்கள், ஒரு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம், உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களைத் தங்கள் இணையதளங்களில் வெளியிடுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்  என்ற உபாத்யாய் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரிக்கப் பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியது.

With inputs from Bar and Bench

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Election Commission Supreme Court Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment