வெறுப்பு பேச்சுக்கள் நாட்டின் சூழலை சீர்குலைத்து வருகின்றன, அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்களன்று கூறியது.
ஹர்பிரீத் மன்சுகானி என்ற பெண், வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக அரசாங்கத்தின் செயலற்ற தன்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
அதில், சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக "பெரும்பான்மை இந்து வாக்குகளை வெல்வதற்காகவும், அனைத்து பதவிகளிலும் அதிகாரத்தை பிடிப்பதற்காகவும், இனப்படுகொலை செய்து 2024 தேர்தலுக்கு முன் இந்தியாவை இந்து ராஷ்டிரா ஆக்குவதற்காகவும்" வெறுப்பூட்டும் பேச்சுக்கள் நடத்தப்படுவதாகவும், இதில் பல குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி யு யு லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, மனுவில் குறிப்பிட்ட விவரங்கள் அல்லது விரிவான தகவல்கள் இல்லை என்றும், "தெளிவற்ற" வலியுறுத்தல்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறினார்.
அந்தக் குறிப்பிட்ட குற்றங்களின் விவரங்கள் என்ன, அதன் நிலை என்ன, நீங்கள் என்ன சொல்கிறீர்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் யார், ஏதேனும் குற்றம் பதிவு செய்யப்பட்டதா அல்லது பதிவு செய்யப்படவில்லையா போன்றவை எங்களுக்குத் தெரியாது.
வெறுப்புப் பேச்சுகளின் விளைவாக முழுச் சூழலும் களங்கப்படுத்தப்படுகிறது என்று நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். இதைத் தடுக்க வேண்டும் என்று கூறுவதற்கு உங்களுக்கு நியாயமான எல்லா ஆதாரங்களும் இருக்கலாம், ஆனால் பிரிவு 32-ன் கீழ் இதுபோன்ற அச்சுறுத்தும் மனு இருக்க முடியாது, என்று கூறிய தலைமை நீதிபதி லலித், மனுதாரருக்கு நீதிமன்றத்தின் உதவி தேவையா என்று யோசிப்பதாக கூறினார்.
அப்போது மனுதாரர் ஹர்பிரீத் மன்சுகானி, ‘வெறுப்பு பேச்சு லாபகரமான வணிகமாக மாற்றப்பட்டுள்ளது’ என்று நீதிபதிகளிடம் கூறினார். முஸ்லிம் விரோத வெறுப்பை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட காஷ்மீரி பண்டிட்களின் கட்டாய வெளியேற்றத்தை சித்தரிக்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற இந்தி திரைப்படத்திற்கு அரசியல் கட்சி நிதியளித்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக மன்சுகானி கூறினார்.
வெறுக்கத்தக்க வகையில் பேசும் சம்பவங்களில், குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கமான நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும். இதில் யார் ஈடுபட்டுள்ளனர், யார் ஈடுபடவில்லை என்பதை நாம் பார்க்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார்.
எவ்வாறாயினும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இது மிகவும் தாமதமானது என்றும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் அவசியம். ஒவ்வொரு முறையும் வெறுப்பு பேச்சு தொடுக்கப்படும்போது, அது திரும்ப வராத அம்பு போன்றது என்று மனுதாரர் வாதிட்டார்
மனுதாரரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த மனுவை நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமானால் அதற்கு உண்மை பின்னணி தேவை என்று கூறினர், மேலும் சில "சமீபத்திய நிகழ்வுகளை" கேட்டனர். அதற்கு மனுதாரர் குறிப்பிட்ட நிகழ்வுகளை முன்வைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக கூறினார்.
இதையடுத்து இந்த பொதுநல மனு நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், இது தொடர்பான ஒரு வழக்கில், நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 'தரம் சன்சத்' நிகழ்வுகளில் வெறுப்புணர்வை வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு டெல்லி மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.