கோவிட் தொற்றுநோய் பரவலின்போது அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் அதன் விளைவாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்காக விசாரித்தது.
“மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று நாங்கள் கூறவில்லை, இந்திய யூனியன் கோவிட் சமயத்தில் மக்களுக்கு உணவு தானியங்களை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், அது தொடர்வதையும் நாம் பார்க்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
யாரும் உணவில்லாமல் பட்டினியாக வெறும் வயிற்றில் உறங்கக் கூடாது என்பது நமது கலாச்சாரம் என்று செவ்வாய்க்கிழமை கூறிய உச்ச நீதிமன்றம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் உணவு தானியங்கள் கடைசி மனிதனுக்கும் சென்றடைவதைப் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையுடன் புதிய விவரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
“தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் கடைசி மனிதனுக்கும் சென்றடைவதை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என்று நாங்கள் கூறவில்லை. கோவிட் சமயத்தில் மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதை இந்திய அரசு உறுதி செய்துள்ளது. அதே சமயம், அது தொடர்வதையும் பார்க்க வேண்டும். யாரும் பட்டினியாக வெறும் வயிறுடன் தூங்கக்கூடாது என்பது நமது கலாச்சாரம் (உறுதிப்படுத்துவது)” என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.
கோவிட் தொற்றுநோய் பரவலின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பொதுமுடக்கம் தொடர்பான பொது நலன் தொடர்பான விஷயத்தை உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரித்தது.
சமூக ஆர்வலர்களான அஞ்சலி பரத்வாஜ், ஹர்ஷ் மந்தர் மற்றும் ஜக்தீப் சோக்கர் ஆகிய 3 பேர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நாட்டின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது” என்று கூறினார்.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு வளர்ந்து வரும் பயனாளிகளின் பட்டியலில் அதிக நபர்களைச் சேர்ப்பதைத் தடுக்கவில்லை என்று அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட பிரசாந்த் பூஷன், 14 மாநிலங்கள் தங்கள் உணவு தானியங்களின் ஒதுக்கீடு தீர்ந்துவிட்டதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன என்று கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பலன்கள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்கள் வரை கட்டுப்படுத்தப்பட உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் அடிப்படை உரிமையான உணவுக்கான உரிமையுடன், மேலும் தேவைப்படும் மக்கள் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
2013 ஆம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இந்தியாவில் தனிநபர் வருமானம் உண்மையின் அடிப்படையில் 33.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் அதிக வருமானம் பெறும் பிரிவிற்கு மாறியுள்ளதாக மத்திய அரசு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
“தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து, கடந்த எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் மக்கள்தொகையின் தனிநபர் வருமானம் உண்மையான அடிப்படையில் 33.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்களின் தனிநபர் வருவாயின் அதிகரிப்பு அதிக எண்ணிக்கையிலான குடும்பங்களை அதிக வருமானம் பெறும் பிரிவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. மேலும், அவர்கள் 2013-14 இல் இருந்ததைப் போல பாதிக்கப்படாமல் இருக்கலாம்” என்று மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.
மக்கள் கண்ணியத்துடன் வாழ மலிவு விலையில் போதுமான அளவு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013-ஐ அரசாங்கம் அறிவித்தது.
பொது விநியோக முறையின் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுவதற்கு கிராமப்புற மக்களில் 75 சதவிகிதம் மற்றும் நகர்ப்புற மக்களில் 50 சதவிகிதம் வரை இந்த சட்டம் உணவுப் பாதுகாப்பு வழங்குகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும், அவர்களின் உரிமைகளை புறக்கணிக்க முடியாது என்று ஜூலை மாதம் கூறிய உச்ச நீதிமன்றம், ரேஷன் கார்டு இல்லாமல் கூட உணவு தானியங்களைப் பெறுவதற்கு ஒரு வழிமுறையை வகுக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.
இதில் முன்னேற்றம் இருந்தபோதிலும் மக்கள் பசியால் இறக்கின்றனர் என்பதையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதிகபட்ச ரேஷன் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றம் கூறியது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்கான நடவடிக்கைகளைக எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் 3 பேரின் வேண்டுகோளின் பேரில் உச்ச நீதிமன்றம் அதிகாரிகளுக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கியது.தொற்றுநோய் நீடிக்கும் வரை அவர்களுக்கு இலவச உலர் உணவு தானியங்களை வழங்குவதற்கான திட்டங்களை உருவாக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டது. மேலும், கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்குமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“