கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 'கோச்சடையான்' படம் வெளியானது. ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த இப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பைப் பெறவில்லை.
இந்த படம் எடுப்பதற்காக லதா ரஜினிகாந்த் ஆட்பீரோ நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். ஆனால் இந்த கடனில் இப்போதுவரை 1.5 கோடி மட்டுமே அடைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மீதமுள்ள கடனை லதா ரஜினிகாந்த் இன்னும் செலுத்தவில்லை என புகார் கூறி, அவர் மீது ஆட்பீரோ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கோச்சடையான் படத்திற்கான கடனை எப்போது செலுத்துவீர்கள்? என்று கேள்வி கேட்ட நீதிமன்றம், இந்த கேள்விக்கான பதிலை இன்று மதியம் 12.30க்குள் தெரிவிக்குமாறு லதாவிற்கு கெடு விதித்தது.
இந்த நிலையில், மீதமுள்ள நிலுவைத் தொகையை 3 மாதத்துக்குள் லதா ரஜினிகாந்த் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.