Advertisment

பதஞ்சலி விளம்பர வழக்கு : பாபா ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க ஒரு வாரம் அவகாசம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தவறான விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

author-image
WebDesk
New Update
Patanjali Baba Ramdev

பாபா ராம்தேவ்

தவறான விளம்பரம் வெளியிட்டது தொடர்பான வழக்கில், , யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் பகிரங்க மன்னிப்பு கெட்க ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்துள்ள உச்சநீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 23-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனம் சார்பில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலோபதி மற்றும் நவீன மருந்து முறைகளால் குணப்படுத்த முடியாத நாள்பட்ட நோய்களை தீர்க்க,பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத மருத்துகளை பயன்படுத்தலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், பதஞ்சலி நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தவறான விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் எந்த ஒரு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியிடப்பமாது என்று பதஞ்சலி நிறுவனம் சார்பில், நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனாலும் இந்த சர்ச்சை விளம்பரங்கள் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.

இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற விசாரணையில், பதஞ்சலி நிறுவனத்திற்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், இது குறித்து ஏன் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நிலையில், இது குறித்து யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மன்னிப்பு கோரியிருந்தனர். இந்த மன்னிப்பு வெறும் வாய் வார்த்தை என்று இந்த மன்னிப்பை நிராகரித்தது,

இது குறித்து , யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் தனித்தனியே பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட இதனையும் உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்ட இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க ஒரு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் "நீங்கள் நன்றாக வேலை செய்கிறீர்கள், என்பதற்காக அலோபதியை தரம் தாழ்த்த முடியாது" என்று கூறிய நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதேபோல் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில்  ஆஜரான ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் கடந்த வாரம் தங்கள் மன்னிப்பை நீதிமன்றம் ஏற்க மறுத்ததால், பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக இருவரும் தெரிவித்ததை நீதிபதிகள் கவனத்தில் எடுத்துக்கொண்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baba Ramdev
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment