Advertisment

பிரசாந்த் பூஷன் வழக்கு : அறிக்கையை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் காலஅவகாசம்

Prashant Bhushan contempt case: ஆக்கபூர்வமான விமர்சனம் மற்றும் தீங்கிழைக்கும் அறிக்கை ஆகியவற்றை வேறுபடுத்த இந்த தீர்ப்பு தவறிவிட்டது

author-image
WebDesk
New Update
Supreme court, Prashnt Bhushan court contempt case, quantum of punishmnet, guilty, prashant bhushan contempt case, prashant bhushan guilty,prashant bhushan supreme court, prashant bhushan supreme court, prashant bhushan tweets, supreme court news, indian express news

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு, கோர்ட் அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தனது தண்டனை விபரங்களை மற்றொரு அமர்வு வழங்க வேண்டும் என்ற தரப்பிலான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தமது சமூக வலைதளப் பக்கங்களில் பிரசாந்த் பூஷன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதேபோல் நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவருக்கான தண்டனை குறித்து இன்று அறிவிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பிரசாந்த் பூஷன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமையன்று ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பிரசாந்த் பூஷன் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகையால் தண்டனை தொடர்பான இன்றைய விவாதங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர் கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி அடங்கிய நீதிபதிகள் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. பிரசாந்த் பூஷனின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர் தண்டனை வழங்கப்பட்ட பின்னரே தீர்ப்பு வெளியாகும் என்று கூறியது. அத்துடன் நாங்கள் உங்களைத் தண்டித்தாலும், அது மறுபரிசீலனை செய்யப்படும் வரை அது செயல்படுத்தப்படாது. நாங்கள் நியாயமாக இருப்போம். இந்த பெஞ்சைத் தவிர்க்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிரசாந்த் பூஷனுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதாடினார். அவர் தனது வாதத்தில் தெரிவித்துள்ளதாவது, ஆகஸ்ட் 14ம் தேதி நீதிபதிகள் அளித்த தீர்ப்பு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்த தீர்ப்பு தொடர்பான நியாயமான விமர்சனங்களை கருத்தில் கொள்ளப்போவதில்லை என்று நீதிபதி அருண் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார். பூசனுக்கு ஆதரவாக தவான் வாதாடியதை பார்த்த நீதிபதிகள், சில நேரங்களில் வைராக்கியத்தில், நீங்கள் லக்ஷ்மன் ரேகாவைக் கடக்கிறீர்கள் ... நல்ல காரணங்களுக்காக வழக்குகளையும் வேலைகளையும் நாங்கள் பாராட்டுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின் படியே, நாங்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம். அதில் நீதித்துறைக்கு சவக்குழி தோண்டப்பட்டுள்ளது. பேச்சுரிமை, கருத்துரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற விதிகள் 2013ன் படி, இந்த தீர்ப்பு வந்ததில் இருந்து 30 நாட்களுக்குள் நாங்கள் மனுத்தாக்கல் செய்துள்ளோம். 21 ஆவது பிரிவின் கீழ் ஒரு குடிமகனின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பான அடிப்படை பொதுக் கொள்கையின் பார்வையில் நீதியின் நலன்களுக்காக அவரது முதல் முறையீடு (இந்த விஷயத்தில் மறுஆய்வு விண்ணப்பம்) கருதப்படும் வரை இருக்கும் என்று பூஷன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கோர்ட் அவமதிப்பு வழக்கில், பிரசாந்த் பூசனுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பார் கவுன்சிலை சேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நாடு முழுவதிலும் இருந்து 1500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, பிரசாந்த் பூஷன் வழக்கில் நீதியின் கருச்சிதைவை நிறுத்துங்கள் என்று அவர்கள் ஒரே குரலாக தெரிவித்துள்ளனர். கோர்ட் அவமதிப்பு அச்சுறுத்தல் நிகழ்ந்துள்ள நிலையில், பார் கவுன்சில் அமைதி காத்துக்கொண்டிருப்பது, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் வலிமை, மதிப்பு உள்ளிட்டவைகளை குறைத்து மதிப்பிட வழிவகுக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விஷயத்தை ஒரு அரசியலமைப்பு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் மற்றும் வழக்கில் "உள் நீதிமன்றம்" மேல்முறையீடு செய்ய வேண்டும். என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு “சுதந்திரமான பேச்சு மற்றும் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துவதில் ஒரு அசாதாரண விளைவை ஏற்படுத்தியுள்ளதாக திக்விஜய் சிங், சசி தரூர், பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் குறிப்பிட்டுள்ளதாக, பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். ஆக்கபூர்வமான விமர்சனம் மற்றும் தீங்கிழைக்கும் அறிக்கை ஆகியவற்றை வேறுபடுத்த இந்த தீர்ப்பு தவறிவிட்டதாக அவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Prashant Bhushan contempt case: SC gives lawyer 2-3 days to ‘reconsider statement’, rejects plea for sentencing by another bench

Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment