Advertisment

'நேர்மையான கரங்களுடன் அணுகுங்கள்'; ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமின் மறுப்பு!

உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்குப் பிறகு, இடைக்கால ஜாமீன் கோரிய மனுவை ஹேமந்த் சோரன் வாபஸ் பெற்றார். முன்னதாக நீதிபதிகள், “சோரன் சுத்தமான கரங்களுடன் அணுகவில்லை” என்றனர்.

author-image
WebDesk
New Update
Supreme Court refuses to entertain Hemant Sorens interim bail plea

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக நிலமோசடி தொடர்பான வழக்கில் பணமோசடி குற்றச்சாட்டில் இடைக்கால ஜாமீன் கோரிய ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை (மே 23, 2024) மறுத்துவிட்டது.

Advertisment

அமலாக்க இயக்குனரகம் (ED) தாக்கல் செய்த புகாரை விசாரணை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதை சோரன் தெரிவிக்காததால் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு வருத்தம் தெரிவித்தனர்.
அப்போது, “உங்கள் கட்சிக்காரரிடம் இருந்து சில நேர்மையை நாங்கள் எதிர்பார்த்தோம். அவர் ஏற்கனவே ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளார் என்று கூறியிருக்க வேண்டும். வாதங்களின் போது அது எங்களிடம் கூறப்படவில்லை” என்றனர்.

இறுதியாக, மனுவை தள்ளுபடி செய்ய விரும்புவதாகவும், சோரன் சுத்தமான கரங்களுடன் அதை அணுகவில்லை என்றும் உத்தரவில் கூறுவதாகவும் நீதிமன்றம் கூறியது. ஆனால் பெஞ்ச் ஒப்புக்கொண்ட மனுவை வாபஸ் பெறுவதாக சிபல் கூறினார். இறுதியில் மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, நீதிபதி தத்தா சிபலிடம் கேட்டார், “உண்மைகளில் சில விளக்கங்களை நாங்கள் விரும்புகிறோம்? காக்னிசென்ஸ்-டேக்கிங் ஆர்டரைப் பற்றி உங்களுக்கு எப்போது முதல் முறையாகத் தெரிந்தது?" என்றனர்.
அப்போது, “ஏப்ரல் 4 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சோரன் காவலில் இருந்தார் என்று கூறிய சிபல், அன்றே அவருக்குத் தெரிய வந்ததாகக் கருதலாம்” என்றும் கூறினார்.

இந்த நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் 19-வது பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவுக்கு தடையாக இருக்காது என்று முந்தைய தீர்ப்புகளில் எஸ்சி கூறியதாக சிபல் கூறினார். "அதில் எந்த தாக்கமும் இல்லை" எனக் கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Supreme Court refuses to entertain Hemant Soren’s interim bail plea: ‘we expected some candour’

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Jharkhand Cm Hemant Soren
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment