/tamil-ie/media/media_files/uploads/2020/01/SC-GANDHI.jpg)
sc refuses bharat ratna plea for mahatma gandhi, மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை, காந்திக்கு பாரத ரத்னா விருது கோரி வழக்கு, mahatma gandhi, உச்ச நீதிமன்றம், cji bobde on bharat ratna to mahatma gandhi, mahatma gandhi, india news, Tamil indian express
மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்துள்ளது. அதற்கு பதிலாக மனுதாரரிடம் மத்திய அரசு முன் கோரிக்கை வைத்து பிரதிநித்துவம் செய்யுமாறு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
இந்திய அரசின் மிக உயர்ந்த விருது பாரத ரத்னா விருது. இந்த விருது நாட்டுக்காக அரசியல், கலை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய சேவையை செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. பாரத ரத்னா விருது சில தலைவர்களுக்கு உயிருடன் இருந்தபோதும் அவர்களின் மறைவுக்குப் பிறகும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாரத ரத்னா விருதை, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தேசப் பிதா என்று அழைக்கப்படுகிற மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை. அதனால், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை தேசப் பிதா காந்திக்கும் வழங்க வேண்டும் என்று இந்திய அரசியலில் அவ்வப்போது கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, “மனுதாரரின் இந்த உணர்வை ஏற்றுக்கொள்கிறது. ஆனால், இது அரசின் கொள்கை விஷயமாகும். நாங்கள் உங்களுடன் உடன்படுகிறோம். உங்கள் உணர்வைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், இது கொள்கை விஷயமாக உள்ளது. அதனால், அரசாங்கத்தின் முன் ஒரு பிரதிநிதித்துவத்தை உருவாக்குங்கள்.” என்று தெரிவித்துள்ளனர்.
தேசப் பிதா மகாத்மா காந்தி அத்தகைய சடங்கான அங்கீகாரத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கூறினார் என்று பார் & பெஞ்ச் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.