பெண்கள் மீது அதிக மதிப்பு இருக்கிறது: சர்ச்சை கமென்டுக்கு பதில் சொன்ன உச்ச நீதிமன்றம்

சர்வதேச மகளிர் தினத்தில் – அண்மையில், உச்ச நீதிமன்றம் ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டபவரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்வாரா என்று கேட்டது. அதனால், உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வந்தன.

“எங்களுக்கு பெண்கள் மீது  மிக அதிக மதிப்பு உள்ளது” என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான உச்சநீதிமன்றம் திங்கள் கிழமை தெரிவித்தது. மேலும், நீதித்துறையின் நற்பெயர் அதன் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்ளின் சங்கம் கையில் உள்ளது என்று கூறினார்.

நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரையும் உள்ளடக்கிய அமர்வு பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு கர்ப்பமான 14 வயது சிறுமியின் வழக்கை விசாரித்தபோது, சிறுமியின் கிட்டத்தட்ட 26 வார காலக் கருவை கலைக்க அனுமதி கோரப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தில் – அண்மையில், உச்ச நீதிமன்றம் ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டபவரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்வாரா என்று கேட்டது. அதனால், உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வந்தன.

சிபிஐ (மார்க்சிஸ்ட்) பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், மார்ச் 1ம் தேதி பாலியல் பலாத்காரம் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது கூறப்பட்டதாக வெளியான கருத்துக்களை தலைமை நீதிஅப்தி திரும்பப் பெறுமாறு பிருந்தா காரத் கேட்டுக் கொண்டார்.

பெண்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் பலர், பிரபலங்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர், தலைமை நீதிபதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருடைய கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியிருந்தனர்.

பாலியல் பலாத்கார குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயது நிரம்பியதும் அவரை திருமணம் செய்து கொள்வாயா என்று உச்சநீதிமன்றம் உறுதிமொழி கேட்டதாக நீதித் துறைப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டது.

முந்தைய வழக்கைப் பற்றி குறிப்பிடுகையில், உச்ச நீதிமன்ற அமர்வு, “திருமணத்திற்குப்பின் மனைவியை சம்மதம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான எந்தவொரு வழக்கும் எங்கள் முன் இருந்ததாக எங்களுக்கு நினைவில் இல்லை… எங்களுக்கு பெண்கள் மீது அதிக மதிப்பு இருக்கிறது.” என்று திங்கள் கிழமை தெரிவித்தது.

“எங்களுடைய நற்பெயர் எப்போதும் வழக்கறிஞர்களின் பார் கைகளில் உள்ளது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த கருத்துக்கு ஒப்புதல் அளித்தனர். திங்கள் கிழமை பட்டியலிடப்பட்ட வழக்கில் மனுதாரருக்காக ஆஜரான வழக்கறிஞர் வி.கே.பிஜு, மக்களில் ஒரு பகுதியினர் நிறுவனத்தை களங்கப்படுத்துவதாகவும், இதைச் சமாளிக்க ஒருவித வழிமுறை தேவை என்றும் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தை ஆதரித்த இந்திய பார் கவுன்சில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய செயல்பாட்டாளர்கள் அவருடைய கருத்தை திரும்பப் பற வேண்டும் என்று மிக உயர்ந்த நீதித்துறையை அவதூறு செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இதன் நடவடிக்கைகளில் அரசியல் செய்யக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது.

மார்ச் 1 ம் தேதி மகாராஷ்டிரா மாநில மின் உற்பத்தி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. அவர் பிப்ரவரி 5ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் அவருடைய ஜாமீன் மனுவை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமர்வு குற்றம் சாட்டப்பட்டவரிடம், “நீங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்யத் தயாரா?” என்று கேட்டது.

“நீங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், நாங்கள் அதை பரிசீலிப்போம். இல்லையென்றால், நீங்கள் சிறைக்கு செல்வீர்கள்” என்று நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. மேலும், “நாங்கள் உங்களை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தவில்லை” என்றும் கூறினார்கள்.

அந்த நபரின் வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர் ஆரம்பத்தில் சிறுமியை திருமணம் செய்ய தயாராக இருந்தார். ஆனால், அந்த பெண் மறுத்துவிட்டார். இப்போது, அந்த நபர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Supreme court says we have highest respect for women

Next Story
உஜ்வாலா டு ஜூம்லா… மோடி- அமித்ஷா கூட்டணியின் பொய்கள்: மமதா கடும் தாக்கு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com