சிறப்பு திருமணச் சட்டம் 1954இன் கீழ் தன் பாலின திருமணங்களை பதிவுச் செய்யக் கோரிய மனுக்கள் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (நவ.25) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஹிமா ஹோக்லி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பதில் என்ன என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள். தொடர்ந்து, நான்கு வாரத்தில் இது தொடர்பாக பதில் அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் இந்திய அட்டர்னி ஜெனரல் ஆகியோருக்கு நோட்டீஸ் அளிக்கப்படும் எனவும் கூறினார்கள்.
தன்பாலின திருமணம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. முதல் வழக்கு ஹைதராபாத்-ஐ சேர்ந்த தன்பாலின தம்பதி சக்ரபோர்த்தி, அபேய் தங் தொடர்ந்திருந்தனர்.
இரண்டாவது வழக்கு தன்பாலின மற்றொரு தம்பதி பார்த் பிரோஸ் மேக்ரோடிரா, உதய் ராஜ் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் லெஸ்பியன், கே, மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளிட்ட நபர்களின் திருமணத்துக்கு அங்கீகாரம் மற்றும் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil