ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தண்டனையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்தது.
அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதற்கான காரணத்தை விசாரணை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தனக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரரான பூர்ணேஷ் மோடியின் அசல் குடும்பப்பெயர் மோடி அல்ல என்றும் அவர் (பூர்ணேஷ்) மோத் வனிகா சமாஜைச் சேர்ந்தவர் என்றும் உச்ச நீதிமன்றத்தில் காந்தி வாதிட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு வந்துள்ளது.
அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவரின் தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த ராகுலின் மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
“முதலில், பூர்ணேஷ் மோடியின் (புகார்தாரர்) அசல் குடும்பப்பெயர் மோடி அல்ல… அவர் தனது குடும்பப்பெயரை மாற்றிக்கொண்டார்… காந்தி தனது உரையின் போது குறிப்பிட்ட நபர்களில் ஒருவர் கூட வழக்குத் தொடரவில்லை.
பாரதிய ஜனதா அலுவலகத்தில் இருந்தவர்களே வழக்கு தொடுத்துள்ளனர்” என காந்தியின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார்.
சிங்வி மேலும், “ராகுல் காந்திக்கு கிரிமினல் முன்னோடி எதுவும் இல்லை என்றும், பாஜக தொண்டர்கள் தாக்கல் செய்த எந்த வழக்குகளிலும் தண்டனையும் இல்லை” என்றும் கூறினார்.
பாஜக எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் ஜூலை 7ஆம் தேதி மறுத்ததை அடுத்து வயநாடு முன்னாள் எம்பி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
2019 கோலார் அரசியல் பேரணியில் "எல்லா திருடர்களும் மோடியின் குடும்பப் பெயரை ஏன் பகிர்ந்து கொள்கிறார்கள்" என்று கூறியதற்காக, மார்ச் 23 அன்று, சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் காந்தி இந்த வழக்கில் முதன்முதலில் குற்றவாளி என்று அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“