முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் அதன் நீர்மட்டத்தை நிர்வகிப்பது குறித்து ஆய்வு செய்ய மேற்பார்வைக் குழு ஏற்கனவே இருக்கும்போது, அணையை நிர்வகிக்கும் பொறுப்பு எங்களிடம் இல்லை என்று தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
“அணையின் பாதுகாப்பு என்பது நீர்மட்டத்தை நிர்வகிப்பது தொடர்பானது. அதற்காக ஏற்கெனவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது… நாங்கள் இங்கே அணையை நிர்வகிப்பதற்காக இங்கே இருக்க வில்லை.” என்று நீதிபதி ஏ.எம். கான்வில்கர், நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.
இருப்பினும், அணையின் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து அக்கறை கொண்டிருப்பதாக நீதிமன்றம் கூறியது. எனவே, சட்டப்பூர்வ அடிப்படையில் அணையை கண்டிப்பாக ஆய்வு செய்ய தயாராக இருப்பதாகவும், ஏற்கெனவே உள்ள குழுவின் பணியான அணை நிர்வாகத்தில் தலையிட மாட்டோம் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.
இரண்டு மாநிலங்கள் உட்பட வழக்குகளில் இணைந்துள்ளவர்களை பிப்ரவரி மாதத்திற்குள் தீர்ப்பதற்காக முக்கிய பிரச்சினைகளை இறுதி செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தது.
முந்தைய விசாரணையில், அணை தொடர்பான ஒவ்வொரு பிரச்சினைக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டாம் என்று கேரளா மற்றும் தமிழக அரசுகளிடம் உச்சநீதிமன்றம் கூறியது. இரண்டு மாநிலங்களும் சாதாரண மனுதாரர்களைப் போல நடந்துகொள்ளவும், நீதிமன்றத்தை அரசியல் நற்பெயரைப் பெறுவதற்கான தளமாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தியது.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மாநில அரசுகள் உணர்ச்சிவசப்படாமல் அணுகி ஒருமித்த முறையில் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் அன்றாட நிர்வாகத்தில் உச்சநீதிமன்றத்தை நிர்ப்பந்திக்கக் கூடாது என்பதை இரு அண்டை மாநிலங்களுக்கும் தொடர்ந்து நினைவூட்டி வருகிறது.
தமிழக அரசு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நள்ளிரவில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதாகவும், இதனால் அணையின் தாழ்வான பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் கேரளா புகார் அளித்ததை அடுத்து, நீதிமன்றத்தின் கடுமையான வார்த்தைகள் வந்துள்ளன. தண்ணீர் திறந்து விடுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் தமிழகம் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேரளா கூறியுள்ளது.
அணையில் இருந்து தண்ணீர் எப்போது திறக்க வேண்டும், எப்படி திறக்க வேண்டும் என்பது குறித்து மேற்பார்வைக் குழுதான் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
“அரசியல் அறிக்கைகள் நீதிமன்றத்தில் வெளியிட முடியாது. உணர்ச்சிவசப்படதா அணுகுமுறை இருக்க வேண்டும். தினசரி விண்ணப்பங்கள் இங்கு வர முடியாது. இவை அனைத்தும் யாரோ ஒருவரின் புத்திசாலித்தனத்தால் உருவாக்கப்பட்டது” என்று நீதிபதி கான்வில்கர் குறிப்பிட்டார்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான நிபுணர் குழு மற்றும் அதிகாரப்பூர்வாமன குழுவின் அறிக்கைகள் விரிவான ஆய்வுக்கு பின் அணையின் பாதுகாப்புக்கு ஆதரவு அளித்துள்ளதாக தமிழக அரசு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தது. அணையின் நீர்மட்ட உயரம் 142 அடியாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் ஒப்புதல் அளித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நில அதிர்வு மண்டலத்தில் உள்ளதால், உச்ச வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேரளா கோரிக்கை விடுத்தது. 1939ம் ஆண்டிலிருந்து காலாவதியான நீர் திறப்பு செயல்பாட்டு அட்டவணையை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டதாக அது குற்றம் சாட்டியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.