Advertisment

பிற பகுதிகளில் திரையிடப்படும் ‘தி கேரளா ஸ்டோரி’க்கு மே.வ-வில் ஏன் தடை; சுப்ரீம் கோர்ட் கேள்வி

‘தி கேரளா ஸ்டோரி’ நாட்டின் பிற பகுதிகளில் திரையிடப்படுகிறது… மேற்கு வங்கத்தில் ஏன் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kerala Story, SC Kerala Story, SC Kerala Story bengal ban, தி கேரளா ஸ்டோரி, உச்ச நீதிமன்றம் கேள்வி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, SC Kerala Story tamil nadu ban, SC Kerala Story ban, The Kerala Story reviews

பிற பகுதிகளில் திரையிடப்படும்‘தி கேரளா ஸ்டோரி’க்கு மே.வ-வில் ஏன் தடை... சுப்ரீம் கோர்ட் கேள்வி

தமிழ்நாட்டில் சட்ட ரீதியாக அறிவிக்கப்படாத தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ள நிர்வாக ஏற்பாடுகளை குறிப்பிடுமாறு மாநில அரசை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேட்டுக் கொண்டார்.

Advertisment

மேற்கு வங்கத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாட்டின் பிற பகுதிகளில் பிரச்னை இல்லாமல் இந்த படம் ஓடிக்கொண்டிருகும்போது, அந்த மாநிலத்தில் படத்தை ஏன் அமைதியாக திரையிட முடியாது என மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு கேள்வி எழுப்பியது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கு வங்க மாநில அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், நாட்டின் பிற பகுதிகளில் எந்த பிரச்னையும் இல்லாமல் படம் திரையிடப்படுகிறது என்றும் இந்த படத்திற்கு தடை விதிக்க எந்த காரணமும் இல்லை என்று தெரிகிறது எனவும் தெரிவித்தனர்.

“ஒரே மாதிரியான மக்கள்தொகை அமைப்பைக் கொண்ட மாநிலங்கள் உட்பட நாட்டின் பிற பகுதிகளில் இந்த படம் ஓடுகிறது, அங்கே எதுவும் நடக்கவில்லை. படத்தின் கலை மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் படத்தை பார்க்க மாட்டார்கள்” என்று இந்த நீதிபதிகள் அமர்வு மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியிடம் கூறினர்.

உளவுத்துறை அளித்த தகவல்களின்படி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்றும், பல்வேறு சமூகத்தினரிடையே அமைதி குலைக்கப்படலாம் என்றும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறினார்.

படத்தின் தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, தமிழகத்தில் இந்த படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், திரையிடலை நிறுத்திவிட்டதால், சட்டப் பூர்வமாக ஒரு அறிவிக்கப்படாத தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். “மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, தடை உத்தரவை ரத்து செய்யக் கோருகிறோம்” என்று அவர் கூறினார்.

தலைமை நீதிபதி, தமிழக அரசிடம் கூறியதாவது: “நீங்கள் செய்த குறிப்பிட்ட நிர்வாக ஏற்பாடுகள் என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்… ஏனென்றால், மக்கள் திரையரங்குகளை தாக்கவும் நாற்காலிகலை எரிக்கவும் வரும்போது நாங்கள் கவனிக்க மாட்டோம் என்று மாநில அரசு கூற முடியாது.” என்று கூறினார்.

“நாங்கள் இரு மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்புகிறோம், அவர்கள் புதன்கிழமைக்குள் தங்கள் பதிலைத் தாக்கல் செய்யலாம். இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியது.

மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, ‘தி கேரளா ஸ்டோர் படத்திற்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை உத்தரவிட்டார். மாநில நிர்வாகத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, மம்தா, “வங்காளத்தில் எந்த அரங்கிலும் படம் காட்டப்படாது” என்று கூறி, மாநிலம் முழுவதும் தடை விதிக்குமாறு தலைமைச் செயலாளர் ஹரிகிருஷ்ண திவேதிக்கு உத்தரவிட்டார்.

கேரளாவில் பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர வெளிநாடுகளுக்கு அனுப்புவது போன்ற பொய்யான தகவல்களை இப்படம் பரப்பி வருவதாக பா.ஜ.க அல்லாத கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மல்டிபிளக்ஸ்களில் இருந்து அதை விலக்கிக் கொண்ட தமிழ்நாட்டிலும் பிரச்னைகளை எதிர்கொண்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ‘தி கேரளா ஸ்டோரி” படத்தின் தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். படத்தின் தயாரிப்பாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, “நாங்கள் ஒவ்வொரு நாளும் பணத்தை இழக்கிறோம். இதையே நாங்களும் செய்யப் போகிறோம் என்று இப்போது மற்றொரு மாநிலமும் கூறியிருப்பதால் படம் திரையிட முடியாமல் போய்விட்டது.” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment