scorecardresearch

பெகாசஸ்: சுதந்திரமான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு; முன்னாள் நீதிபதி தலைமையில் கமிட்டி

அதிகாரப்பூர்வமில்லாத கண்காணிப்பு குறித்து ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணை கோரிய 12 மனுக்கள் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது.

பெகாசஸ்: சுதந்திரமான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு; முன்னாள் நீதிபதி தலைமையில் கமிட்டி

ஒவ்வொரு முறையும் தேசப் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுப்பி, அரசாங்கம் தப்பிக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பெகாசஸ் மென்பொருளை அதிகாரப்பூர்வமில்லாத கண்காணிப்புக்குப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் மேற்பார்வையில், 3 தொழில்நுட்ப உறுப்பினர்களைக் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நியமித்தது.

இந்தப் பணியில் நீதிபதி ரவீந்திரனுக்கு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி (1976 பேட்ச்) அலோக் ஜோஷி மற்றும் (சர்வதேச தரநிலைப்படுத்தல் அமைப்பு/சர்வதேச எலக்ட்ரோ-டெக்னிக்கல் கமிஷன்/கூட்டு தொழில்நுட்பக் குழு) துணைக் குழுவின் தலைவர் சுந்தீப் ஓபராய் ஆகியோர் உதவுவார்கள். இந்த குழுவின் மூன்று தொழில்நுட்ப உறுப்பினர்கள், பேராசிரியர் நவீன் குமார் சவுத்ரி, டீன் (சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல்) தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், காந்திநகர், குஜராத்; பேராசிரியர் பிரபாகரன் பி, (பொறியியல் பள்ளி), அமிர்தா விஷ்வ வித்யாபீடம், அமிர்தபுரி, கேரளா; பேராசிரியர் அஷ்வின் அனில் குமஸ்தே, இன்ஸ்டிடியூட் சேர் அசோசியேட், (கணினி அறிவியல் மற்றும் பொறியியல்), இந்திய தொழில்நுட்ப நிறுவனம், பம்பாய், மகாராஷ்டிரா. ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, இந்த குழு கீழ் கண்டவைகளை விசாரித்து, புலனாய்வு, செய்து தீர்மானிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது: (i) பெகாசஸ் ஸ்பைவேரின் தொகுப்பு, இந்திய குடிமக்களின் தொலைபேசிகள் அல்லது பிற சாதனங்களில் சேமிக்கப்பட்ட தரவை அணுகுவதற்கும், உரையாடல்களை ஒட்டு கேட்க, தகவல்களை இடைமறித்து கேட்க மற்றும்/அல்லது இங்கு வெளிப்படையாகக் கூறப்படாத வேறு ஏதேனும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டதா என்பதை விசாரித்து புலனாய்வு செய்து தீர்மானிக்கும்.

(ii) இத்தகைய ஸ்பைவேர் (உளவு மென்பொருள்) தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் /அல்லது பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்கள்; (iii) பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தி, இந்தியக் குடிமக்களின் வாட்ஸ் அப் கணக்குகளை ஹேக் செய்வது குறித்து 2019ம் ஆண்டில் அறிக்கைகள் வெளியிடப்பட்ட பிறகு, பதிலளித்த இந்திய அரசால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; (iv) இந்தியக் குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக எந்தவொரு பெகாசஸ் ஸ்பைவேர் தொகுப்பையும் பொறுப்புள்ள இந்தியப் அரசு அல்லது ஏதேனும் மாநில அரசு அல்லது ஏதேனும் மத்திய அல்லது மாநில அரசின் முகமை கையப்படுத்தியதா; (v) இந்த நாட்டின் குடிமக்கள் மீது ஏதேனும் அரசாங்க நிறுவனம் பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்தியிருந்தால், எந்தச் சட்டம், எந்த விதி, எந்த வழிகாட்டுதல், எந்த நெறிமுறை அல்லது சட்டப்பூர்வமான நடைமுறையின் கீழ் அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது; (vi) இந்த நாட்டின் குடிமக்கள் மீது ஏதேனும் உள்நாட்டு நிறுவனம்/நபர் ஸ்பைவேரைப் பயன்படுத்தியிருந்தால், அத்தகைய பயன்பாடு அதிகாரப்பூர்வமானதா; (vii) மேற்கூறிய குறிப்பு விதிமுறைகளுடன் தொடர்புடைய தற்செயலான வேறு எந்த விஷயமும் அல்லது அம்சமும், இந்த குழுவானது உரிய விசாரணைக்கு ஏற்றது என்று கருதலாம்.

மேலும், அது பரிந்துரைகளை வழங்கலாம்: (i) தற்போதுள்ள சட்டம் மற்றும் கண்காணிப்பைச் சுற்றியுள்ள நடைமுறைகள் மற்றும் அந்தரங்க உரிமைக்கான மேம்படுத்தப்பட்ட உரிமையைப் பாதுகாப்பதற்கான சட்டம் அல்லது சட்டத் திருத்தம் குறித்து பரிந்துரை செய்யலாம்.

(ii) நாடு மற்றும் அதன் சொத்துக்களின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துதல் குறித்து பரிந்துரைகள் வழங்கலாம்.

(iii) அத்தகைய ஸ்பைவேர்கள் மூலம் அரசு /அல்லது அரசு சாரா நிறுவனங்களால் சட்டத்தின்படி அல்லாமல், குடிமக்களின் அந்தரங்க உரிமையின் மீதான தாக்குதலை தடுப்பது குறித்து உறுதி செய்யும் பரிந்துரைகள் செய்யலாம்.

(iv) குடிமக்கள் தங்கள் சாதனங்களை சட்டவிரோதமாக கண்காணிக்கப்படுகிறது என்ற சந்தேகத்தின் பேரில் புகார்களை எழுப்புவதற்கான ஒரு பொறிமுறையை நிறுவுவது குறித்து பரிந்துரைகள் செய்யலாம்.

(v) சைபர் பாதுகாப்பு பாதிப்புகளை விசாரிப்பதற்கும், சைபர் தாக்குதல்கள் தொடர்பான அச்சுறுத்தலை மதிப்பிடுவதற்காகவும் நாட்டில் சைபர் தாக்குதல் சம்பவங்களை விசாரிப்பதற்காகவும், நன்கு திறன் வாய்ந்த சுதந்திரமான முதன்மை நிறுவனத்தை அமைப்பது குறித்து பரிந்துரைகள் செய்யலாம்.

(vi) குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இடைக்கால நடவடிக்கையாக இந்த நீதிமன்றத்தால் செய்யப்படும் எந்தவொரு தற்காலிக ஏற்பாட்டையும் நாடாளுமன்றத்தால் நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ள குறைபாடுகள் குறித்து பரிந்துரை செய்யலாம்.

(vii) இந்த குழு பொருத்தமான மற்றும் சரியானது என்று கருதக்கூடிய வேறு எந்த துணை விஷயத்தையும் பரிந்துரை செய்யலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

குழுவின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து, நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில், “மோதல்கள் நிறைந்த இந்த உலகில், தவறான முன் முடிவுகள் இல்லாத சுயாதீனமான மற்றும் திறமையான, சுதந்திரமான நிபுணர்களைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான பணி என்று கூறுவது பொருத்தமானது. எந்தவொரு அரசாங்க நிறுவனங்களையும் அல்லது ஏதேனும் ஒன்றை நம்புவதற்குப் பதிலாக, நாங்கள் ஒரு குழுவை அமைத்து, சுயமாக சேகரிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த நிபுணர் உறுப்பினர்களை பட்டியலிட்டுள்ளோம். சில விண்ணப்பதாரர்கள் இந்த வேலையை பணிவுடன் நிராகரித்தனர். மற்றவர்களுக்கு சில முரண்பாடுகள் இருந்தன. எங்களின் சிறந்த நோக்கங்கள் மற்றும் முயற்சிகள் மூலம், குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் மிகவும் புகழ்பெற்ற நிபுணர்களை நாங்கள் தேர்வுசெய்துள்ளோம்.

அதிகாரப்பூர்வமில்லாத கண்காணிப்பு குறித்து ஊடகங்களில் வெளியான குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணை கோரிய 12 மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

அந்தரங்க உரிமை பிரிக்க முடியாதது என்று அறிவிக்கப்பட்டாலும், நியாயமான கட்டுப்பாடுகள் இல்லாமல் அத்தகைய உரிமையை அரசியலமைப்பு வழங்காததால், அது முழுமையானது என்று கூற முடியாது என்று நீதிமன்றம் கூறியது. அந்தரங்க உரிமைக்கு வரும்போது சில வரம்புகள் உள்ளன. இருப்பினும், விதிக்கப்படும் எந்தவொரு கட்டுப்பாடுகளும் அரசியலமைப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறி மேலும் எந்தவொரு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது, ஆனால், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் முன் அனைத்து தகவல்களையும் வெளியிடத் தயாராக இருப்பதாகவும், குழுவை நியமிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தியது.

இந்த குழுவை அமைப்பதற்கான அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், “நிச்சயமாக,… மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பான அரசியலமைப்பு பரிசீலனைகள் இருக்கும் போது, ​​இந்திய யூனியன் தகவல்களை வழங்க மறுக்கலாம். இருப்பினும், ஒவ்வொரு முறையும் ‘தேசிய பாதுகாப்பு’ பற்றிய அச்சம் எழுப்பப்படும்போது, ​​அரசாங்கத்திற்கு தப்பிக்கலாம் என்று அர்த்தமல்ல” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Supreme court verdict on pegasus spyware surveillance