baba-ramdev | supreme-court-of-india | அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்கிழமை (நவ.12) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது,, பதஞ்சலி தயாரிப்புகள் சில நோய்களை "குணப்படுத்துவதாக" பொய்யான விளம்பரங்களை வெளியிட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.
மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறான விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்துமாறு பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, பதஞ்சலி பத்திரிகைகளில் தற்செயலான அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
இந்திய மருத்துவ சங்கம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலியின் தவறான விளம்பரங்கள் அலோபதியை இழிவுபடுத்துவதாகவும், சில நோய்களைக் குணப்படுத்துவது குறித்து தவறான கூற்றுக்களை வெளியிடுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“