quota in SC/ST promotion : அரசியல் சாசன அமர்வின் முடிவுகளின் படி, அரசுப் பணிகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடிகளின் பங்களிப்பில் இருக்கும் பற்றாக்குறையை காட்ட தேவையான அளவிடக் கூடிய தரவுகளை சேகரிக்க மத்திய அரசு என்ன செய்தது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய் கிழமை கேள்வி எழுப்பியது. அந்த தரவுகளின் அடிப்படையில், கொள்கையின் கீழ் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கவும், தரவு இருந்தால் அதனை சமர்பிக்கவும் கேட்டுக் கொண்டது உச்ச நீதிமன்றம்.
பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டினை எவ்வாறு நியாயப்படுத்தினீர்கள்? உங்களின் முடிவை நியாயப்படுத்த என்ன செயல்களை மேற்கொண்டீர்கள்? அதற்கான தரவுகளை காட்டுங்கள் என்று நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலை கேட்டுக் கொண்டது. ”ஜர்னைல் சிங் Vs லஷ்மி நரேன் குப்தா மற்றும் பிறர்” வழக்கில் 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் இருக்கும் பிரச்சனைகளை மேற்கோள் காட்டிய மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் மனுக்களை நீதிமன்றம் விசாரித்த போது இந்த கேள்வியை எழுப்பியது உச்ச நீதிமன்றம்.
நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அளவிடக் கூடிய தரவுகளின் அடிப்படையில் முதலில் பணி உயர்வில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதா என்பதை முதலில் விசாரிப்போம் என்று கூறியது.
எம் நாகராஜ் Vs. இந்திய யூனியன் வழக்கின் தீர்ப்பில் பதவி உயர்வு விவகாரத்தில் எஸ்.சி./எஸ்.டிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதில்லை. ஆனாலும், அதனை செய்ய மாநில அரசுகள் விரும்பினால், அந்த பிரிவின் பின் தங்கிய தன்மை மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் அவர்களின் எண்ணிக்கையில் போதாமை இருப்பதை உறுதி செய்ய தேவையான தரவுகளை சேகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி அரசுக்கு வலுவான காரணங்கள் இருந்தாலும் கூட 50% இட ஒதுக்கீட்டிற்கு மேலே செல்லக் கூடாது. கிரீமி லேயரை ஒழிக்க அல்லது காலவரையின்றி முன்பதிவை நீட்டிக்க, அதன் இட ஒதுக்கீடு அதிகப்படியான நிலைக்கு வழிவகுக்காது என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.