”அஜித் பவார் துரோகியாக மாறிவிட்டார்” – சரத் பவாரின் மகள் சுப்ரியா

பாஜகவுடன் கைகோர்க்க அஜித் பவார் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், சுப்ரியா சுலே கூறியுள்ளார். 

By: November 23, 2019, 4:01:50 PM

Maharashtra Politics : “அஜித் பவார் துரோகியாக மாறிவிட்டார்” என அஜித்தின் சித்தப்பா மகளும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே சனிக்கிழமை மதியம் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு  தெரிவித்தார். “குடும்பம் மற்றும் கட்சி இரண்டிலுமே பிளவு ஏற்பட்டு விட்டது” எனவும் பாரமதி தொகுதியின் எம்.பி-யான சுப்ரியா தெரிவித்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு கொடுத்த தனது முந்தைய நேர்காணல்களில், சரத் பவார், ஒரு`போர்வீரர்’ எனக் குறிப்பிட்டார் சுப்ரியா. அவர் கட்சிக்காக எப்படிப் போராடினார் என்பதையும், தேர்தல் சமயத்தில் அவர் பின்பற்றும்  நேர்மை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை கட்சிக்கு எவ்வளவு வலிமையானதாக இருந்தது எனவும், அந்த நேர்க்காணல்களில் கூறியிருந்தார் சரத் பவாரின் மகளாக சுப்ரியா.

என்.சி.பி கட்சி மாநிலம் முழுவதும் கடினமான தருணங்களை எதிர்கொண்ட போது, அக்கட்சி உறுப்பினர்கள் அத்தனை பேரும், அவர்களுக்கு ஆதரவாக நின்றதாகவும், ஆனால் பாஜகவுடன் கைகோர்க்க அஜித் பவார் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

”எனது தந்தை ஷரத் பவார் இனி அஜித் பவருடன் இல்லை” என்றார் அவர். சுலே என்.சி.பியின் நட்சத்திர பிரச்சாரகராக இருந்து வருகிறார். எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க என்.சி.பி கட்சியின் எம்.எல்.ஏக்கள் இன்று மாலை 4.30 மணிக்கு ஒரு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Supriya sule ajit pawar maharashtra ncp leader sharad pawar

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X