Advertisment

கேரளாவின் முதல் பா.ஜ.க எம்.பி: மத்திய அமைச்சராகும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி

நடிகரும், கேரளாவின் முதல் பா.ஜ.க மக்களவை எம்.பி.யான சுரேஷ் கோபி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இணைய உள்ளார்.

author-image
WebDesk
New Update
Suresh Gopi Keralas first BJP MP set to become Union Minister Tamil News

250 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி, ஏப்ரல் 2016 இல் குடியரசுத் தலைவரின் பரிந்துரையால் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி தமிழில் தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில், பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு  74,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவின் முதல் பா.ஜ.க என்கிற பெருமையை சுரேஷ் கோபி பெற்றார். 

Advertisment

இந்நிலையில், நடிகரும், கேரளாவின் முதல் பா.ஜ.க மக்களவை எம்.பி.யான சுரேஷ் கோபி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இணைய உள்ளார்.

இந்த நிகழ்வுக்காக டெல்லிக்குச் செல்வதற்கு முன், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சுரேஷ் கோபி பேசுகையில், “இது (அமைச்சரவை பதவி) மோடியின் முடிவு. அவர் எனக்கு போன் செய்து காலை 11.30 மணிக்கு தனது வீட்டில் இருக்கும்படி கூறினார். நான்  அவரது பேச்சுக்கு கீழ்ப்படிகிறேன். எனக்கு வேறு எதுவும் தெரியாது. கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் பணிபுரியும் எம்.பி.யாக இருப்பேன். இதை பிரச்சாரத்தின் போது திருச்சூர் மக்களிடம் நான் ஏற்கனவே கூறியிருந்தேன்." என்றார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Another milestone for Suresh Gopi: Kerala’s first BJP MP set to become Union Minister

முந்தைய என்.டி.ஏ அரசாங்கங்களில், பா.ஜ.க-வுக்கு கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் பிற மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி.க்கள் ஆவார். எடுத்துக்காட்டாக, செயலிழந்த இந்திய ஃபெடரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவரான பி.சி தாமஸ், அடல் பீகார் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் '2003-'04 வரை மத்திய இணை அமைச்சராக (MoS) பணியாற்றினார்.

பா.ஜ.க ஏணியில் கோபி ஏறியது எப்படி? 

65 வயதான கோபி, எட்டு வருடங்கள் மட்டுமே பா.ஜ.க-வில் இருக்கிறார். ஆனால், சி.பி.ஐ(எம்) மற்றும் காங்கிரஸுக்கு இடையேயான இருமுனைத் தேர்தல் அரசியலுக்கு முடிவு கட்ட பல ஆண்டுகளாக உழைத்து வரும் கேரள பா.ஜ.க-வுக்கு அவரது வெற்றி இப்போது பாடமாக உள்ளது.

250 படங்களுக்கு மேல் நடித்துள்ள பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி, ஏப்ரல் 2016 இல் குடியரசுத் தலைவரால் ராஜ்யசபா உறுப்பினராக பிரபல பிரமுகர்களின் பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டார். சில மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 2016 இல் அவர் பா.ஜ.க-வில் சேர்ந்தார்.

அந்த நேரத்தில், கேரளாவில் சினிமா பிரபலங்கள் தீவிர அரசியலில் நுழைவது அரிது. திருவனந்தபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கோபி, விரைவில் பா.ஜ.க-வின் நட்சத்திர பிரச்சாரகராக உருவெடுத்தார், போலீஸ் அதிகாரி வேடங்களில் நடிக்க அறியப்பட்ட ஒரு அதிரடி திரைப்பட நட்சத்திரமாக பயணித்தார். 

2019 மக்களவைத் தேர்தலில், கோபி திருச்சூரில் தேர்தல் களத்தில் அறிமுகமானார், ஆனால் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். காங்கிரஸ் சார்பில் டிபி பிரதாபன் வெற்றி பெற்றார். சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளாவில் உள்ள இந்து சமூகத்தினரை கோபி இந்த நேரத்தில் அணுக முடிந்தது. அவர் தேர்தலில் தோல்வியடைந்தாலும், 2014 இல் 11.15% ஆக இருந்த பா.ஜ.க-வின் வாக்குப் பங்கை 28.2% ஆக கோபி அதிகரிக்க முடிந்தது. பின்னர், அவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் திருச்சூரில் இருந்து போட்டியிட்டார். அதிலும் அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஆனாலும் அவர் மீண்டும் வாக்குப் பங்கை அதிகரித்தார்.

இழப்புகள் இருந்தபோதிலும், கோபி திருச்சூரில் தொண்டு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார். மேலும் அப்பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக மாநிலங்களவை எம்.பியாக தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி அபிவிருத்தி திட்ட (MPLADS) நிதியைச் செலவழித்தார்.

2023ல், கூட்டுறவு வங்கி நிதி மோசடியில் சி.பி.ஐ(எம்) சிக்கியபோது, ​​கோபி அடிமட்ட அளவில் போராட்டம் நடத்தினார். அந்த நேரத்தில் மக்களைச் சென்றடைய பிரச்சாரம் செய்த அவர், தனது பிரபலமான திரைப்பட வசனங்களில் ஒன்றைப் பயன்படுத்தினார். அது "நான் திருச்சூர் எடுக்கிறேன், எனக்கு திருச்சூர் வேண்டும்" என்பது தான்.

ஏப்ரல் 26-ம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, கூட்டத்தை நிர்வகிப்பதன் காரணமாக, மாநிலத்தின் கலாச்சார திருவிழாவான திருச்சூர் பூரத்திற்கு மக்கள் செல்வதை காவல்துறை தடை செய்தது. விழா ஏற்பாட்டாளர்களைச் சந்திக்கவும் மேலும் பலரை உள்ளே வருமாறு பேச்சுவார்த்தை நடத்தவும் கோபி ஆம்புலன்ஸில் அதிரடியாக நுழைந்தார்.

கிறிஸ்தவ வாக்குகளைப் பெறுவதற்கான பா.ஜ.க-வின் அரசியல் போக்கிற்கு இசைவாக, கோபி சமூகத்தையும் சென்றடைந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் தனது மகளின் திருமணத்தைக் குறிக்கும் வகையில் லூர்து பெருநகர கதீட்ரல் தேவாலயத்திற்கு தங்க கிரீடத்தை வழங்கினார். மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வி.எஸ் சுனில்குமாரை 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த கோபி இன்னும் மலையாளத் திரையுலகில் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறார். 

Kerala Suresh Gopi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment