இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருச்சூர் பூரம் திருவிழாவின் போது ஆம்புலன்சில் பயணம் செய்ததாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Actor-MP Suresh Gopi booked for ‘using ambulance’ during Thrissur Pooram
ஏப்ரல் 19-ம் தேதி பூரம் திருவிழா முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 26-ம் தேதி நடந்த தேர்தலில், கேரளாவிலிருந்து பா.ஜ.க-வின் ஒரே தொகுதியான திருச்சூர் மக்களவைத் தொகுதியில் இருந்து கோபி வெற்றி பெற்றார்.
போலீசாரின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் திருவிழாவின் சடங்கு ஊர்வலங்கள் மற்றும் முக்கியமான வாணவேடிக்கைகளை கைவிடுவதாக இந்த ஆண்டு ஏற்பாட்டாளர்கள் அச்சுறுத்தினர். இருப்பினும், திருவிழா முட்டுக்கட்டையாக இருந்ததால், சுரேஷ் கோபி திடீரென ஆம்புலன்ஸ் மூலம் அந்த இடத்தில் தோன்றி, அமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், பூரம் நிகழ்வுகளை மீண்டும் தொடங்க வழி வகுத்தார்.
பூரம் விவகாரத்தில் சதி இருப்பதாக ஆளும் இடதுசாரி முன்னணி உறுப்பினரான சி.பி.ஐ மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டின. சுரேஷ் கோபி இந்த கருத்துகளை மறுத்துள்ளார். மேலும், அவர் காரில் சம்பவ இடத்திற்கு வந்ததாகக் கூறினார்.
வழக்கறிஞர் சுமேஷ் பவதாசன் அளித்த புகாரின் பேரில் திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கோபியும் மற்றவர்களும் ஆம்புலன்ஸில் பயணம் செய்ததாகவும், அந்த வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், பூரம் அன்று இரவு திருச்சூரில் உள்ள பரபரப்பான தெரு வழியாக ஓட்டிச் சென்றதாகவும் எஃப்.ஐ.ஆர். ஐ.பி.சி-யின் பிரிவு 279 மற்றும் 34 மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவுகள் 184, 188 மற்றும் 192 ஆகியவற்றின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சுரேஷ் கோபி, கடந்த வாரம், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மாநில அரசுக்கு சவால் விடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“