முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, “தான் பிராமணர்” என்பதால் சென்னையின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறியதையடுத்து சமூக ஊடகங்களில் விமர்சித்திற்கு ஆளானார். தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் (டி.என்.பி.எல்) ஐந்தாவது சீசனின் தொடக்க ஆட்டத்தின் போது வர்ணனையில் சேர அழைக்கப்பட்டபோது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரெய்னா இந்த கருத்தை தெரிவித்தார்.
டி.என்.பி.எல் சீசனின் முதல் போட்டி திங்களன்று லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் இடையே நடைபெற்றது. போட்டியின் போது, இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் அங்கம் வகிக்கும் ரெய்னாவிடம், தென்னிந்திய கலாச்சாரத்தை எவ்வாறு ஏற்றுக்கொண்டுடீர்கள் என்றும் ரெய்னா வேஷ்டி அணிதல், டான்ஸ் மற்றும் விசில் அடித்தல் பற்றியும் சிஎஸ்கேவின் சொற்றொடர் “விசில் போடு” ஆகியவற்றைக் குறித்தும் ஒரு வர்ணனையாளர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த ரெய்னா, “நானும் பிராமணன் என்பதால் சென்னையின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டதாக நினைக்கிறேன். நான் சென்னையில் 2004 முதல் விளையாடி வருகிறேன், நான் சென்னையின் கலாச்சாரத்தை விரும்புகிறேன்… நான் எனது அணியினரை நேசிக்கிறேன். நான் அனிருதா ஸ்ரீகாந்த், பத்ரி (சுப்பிரமணியம் பத்ரிநாத்), பாலா பாய் (எல் பாலாஜி) ஆகியோருடன் விளையாடியுள்ளேன்… இங்கிருந்து நீங்கள் ஏதாவது நல்லதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எங்களுக்கு ஒரு நல்ல நிர்வாகம் உள்ளது, நம்மை ஆராய்வதற்கான உரிமம் எங்களிடம் உள்ளது. நான் சென்னையிலுள்ள கலாச்சாரத்தை விரும்புகிறேன், மேலும் CSK இன் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு அதிர்ஷ்டம். நாங்கள் சென்னையில் அதிக போட்டிகளில் விளையாடுவோம் என்று நம்புகிறோம். ”
34 வயதான சுரேஷ் ரெய்னா 2020 ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கவுள்ள மீதமுள்ள ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவுடன் விளையாடுவதை எதிர்பார்ப்பதாக ரெய்னா கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
TNPL வர்ணனை: 'நானும் பிராமணன்' எனக் கூறிய ரெய்னா; புதிய சர்ச்சை
Suresh Raina called out for ‘Brahmin’ comment during TNPL commentary: நானும் பிராமணன் என்பதால் சென்னையின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டதாக நினைக்கிறேன்: சுரேஷ் ரெய்னா

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.