Advertisment

சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2 ஆண்டுகள் நிறைவு : டெல்லியில் களைகட்டிய கொண்டாட்டம்!

கோனார்க் போர் நினைவு சின்னம் வளாகத்தில் இந்திய ராணுவத்தின் ஆற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சர்ஜிக்கல் ஸ்டிரைக்

சர்ஜிக்கல் ஸ்டிரைக்

சர்ஜிக்கல் ஸ்டிரைக் : கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயரங்கவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைகின் 2 ஆம் ஆண்டு கொண்டாட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment

சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2ஆம் ஆண்டு கொண்டாட்டம்:

இரண்டு நாடுகள் போர் பதற்றத்தில் இருக்கும் போது,எதிர் நாடு ராணுவத்திற்கு தெரியாமல், அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் நாட்டின் எல்லையிலேயே சென்று தாக்குதல் நடத்துவதற்கு பெயர்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. கடந்த 29-9-2016 அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய வீரர்கள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தியா மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலேயே பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி உள்ளது. இந்த நிலையில் மோடி பிரதமராக பதவியேற்ற பின் கடந்த 2016ல் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. செப்டம்பர் 26 தேதி 2016 அதிகாலை இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்

சென்ற மாதம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கான முதல் ஆதாரம் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதற்கான காரணம், தாக்குதல் நடந்த விதம், எதிரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என அனைத்து விவரம் குறித்தும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை இம்மாதம் 28 முதல் 30-ம் தேதிவரை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

பராக்ரம் பர்வ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கொண்டாட்டத்தை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் டெல்லியில் வைக்கப்பட்டுள்ள ராணுவ ஆயுதங்கள் காட்சியகம்

இங்குள்ள கோனார்க் போர் நினைவு சின்னம் வளாகத்தில் இந்திய ராணுவத்தின் ஆற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சியை பிரதமர் மோடி, பாதுக்காப்புத்துறை அமைசர்  நிர்மலா சீதாராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இங்கு வைக்கப்பட்டுள்ள வருகையாளர் பதிவேட்டில் கையொப்பமிட்ட மோடி, தாய்நாட்டை காக்கும் அர்ப்பணிப்பு உணர்வுள்ள வீரர்களை எண்ணி நாடு பெருமிதம் கொள்கிறது. அவர்களின் தியாகம் எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கசக்தியாக விளங்கும் என குஜராத்தி மொழியில் எழுதிப் பதிவிட்டுள்ளார்.

 

Indian Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment