Advertisment

ஜி20 உறுப்பினர்களால் சாதகமாக பார்க்கப்படும் இந்தியா; சரிந்த மோடியின் பிம்பம் - சர்வே கூறுவது என்ன?

24 நாடுகளில் 30,000 க்கும் மேற்பட்ட மக்களிடம் பியூ ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மே வரை நடத்திய ஆய்வில், இந்தியா சராசரியாக 46% பேர்களால் சாதகமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 34% பேர் இந்தியாவை சாதகமாகப் பார்க்கவில்லை.

author-image
WebDesk
New Update
G20, G20 summit, pm modi, survey on g20, modis image, ஜி20 உறுப்பினர்களால் சாதகமாக பார்க்கப்படும் இந்தியா, உடைந்த மோடியின் பிம்பம், சர்வே கூறுவது என்ன, india favourably viewed, g20 news, Tamil indian express

ஜி20 உறுப்பினர்களால் சாதகமாக பார்க்கப்படும் இந்தியா, சரிந்த மோடியின் பிம்பம், சர்வே கூறுவது என்ன?

24 நாடுகளில் 30,000 க்கும் மேற்பட்ட மக்களிடம் பியூ ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மே வரை நடத்திய ஆய்வில், இந்தியா சராசரியாக 46% பேர்களால் சாதகமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 34% பேர் இந்தியாவை சாதகமாகப் பார்க்கவில்லை.

Advertisment

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட பியூ ஆராய்ச்சி மையத்தின் (Pew Research Centre) கருத்துக் கேட்பு முடிவுகளின், ஜி20 அமைப்பின் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்கள் இந்தியாவைப் பற்றி சாதகமான பார்வையைக் கொண்டுள்ளனர். ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவை சாதகமாகப் பார்க்கும் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பியூ ஆராய்ச்சி மையம் 24 நாடுகளில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரை நடத்திய ஆய்வில், இந்தியா சராசரியாக 46% பேர்களால் சாதகமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 34% பேர்கள் இந்தியாவை சாதகமாகப் பார்க்கவில்லை.

இந்த சர்வேயில் 12 நாடுகளில் உள்ள மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய அவர்களின் பார்வை என்னவென்று கேட்டதில், 40% பேர் உலக விவகாரங்களில் சரியானதைச் செய்ய அவர் மீது நம்பிக்கை இல்லை என்றும், 37% பேர் அவர் சரியானதைச் செய்வார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா, சீனா, சவூதி அரேபியா, துருக்கி ஆகிய ஜி20 நாடுகள் அனைத்தும் இந்தியாவை உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட 24 நாடுகளில் இல்லை. மோடி ஜி20 நாடுகளின் தலைவர்களை புதுடெல்லியில் உச்சிமாநாடு நடத்துவதற்கு இரண்டு வாரங்களுக்குள் இந்த கருத்துக்கணிப்பு வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொள்ள மாட்டார். அமெரிக்காவிலிருந்து பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் இந்தியாவை 51% சாதகமாகப் பார்த்துள்ளனர், 44% பேர் இதற்கு நேர்மாறான கருத்தைக் கொண்டுள்ளனர் என்று இந்த கருத்துக் கேட்பு முடிவு தெரிவித்துள்ளது. மோடிக்கு தனிப்பட்ட முறையில், 21% அமெரிக்கர்கள் மட்டுமே சாதகமான பார்வையைக் கொண்டிருந்தனர், 37% பேர் அவர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளனர்.

இந்தியாவின் பிம்பம் எதிர்மறையாக பார்க்கப்படுவதை விட சாதகமாக பார்க்கப்படுவது இருந்தாலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இந்த புகழ் குறைந்து வருவதாக இந்த கருத்துக் கேட்பு கண்டறிந்துள்ளது. கடந்த கால தரவுகள் கிடைக்கக்கூடிய ஐந்து ஐரோப்பிய நாடுகளில் - பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, போலந்து மற்றும் இங்கிலாந்து - இந்தியாவின் சாதகமான மதிப்பீடு 2008-ல் இருந்து 10 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது.

பிரான்சில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. அங்கே பதிலளித்தவர்களில் 39% பேர் மட்டுமே 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 70% உடன் ஒப்பிடும்போது 2023-ல் இந்தியாவின் சாதகமான பிம்பத்தைக் வைத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment