லக்னோவில் இருக்கும் பாஸ்போர்ட் மையத்தின் அதிகாரியை இடம் மாற்றம் செய்தது தொடர்பாக ட்ரோல் செய்த நெட்டிசன் பதிவுகளை லைக் செய்து மற்றவர்களுக்கு ஷேர் செய்தார் சுஷ்மா.
கடந்த வாரம், உத்திரப் பிரதேசம், லக்னோவில், மதம் மாறி கல்யாணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதியினர், பாஸ்போர்ட் தொடர்பான விசாரணைக்காக பாஸ்போர்ட் மையம் சென்றிருக்கின்றார்கள். தன்வி சேத் மற்றும் அனாஸ் சித்திக் என்ற புதுமணத் தம்பதியினர், தங்களுடைய பாஸ்போர்ட் தொடர்பான விசாரணை ஒன்றிற்காக லக்னோவில் இருக்கின்ற பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்றிருக்கின்றார்கள். அங்கு விசாரணையை மேற்கொண்ட அதிகாரி விகாஷ் மிஸ்ரா, தன்வி சேத் அவர்களின் கடைசிப் பெயரை மாற்றச் சொல்லிக் கேட்டிருக்கின்றார். அவரால் முடியவில்லை என்றால், அவரின் கணவரை இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்யச் சொல்லி இருக்கின்றார். இவை இரண்டிற்கும் எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய அத்தம்பதிகள், பிரச்சனையை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து விகாஷ் மிஸ்ராவினை இடமாற்றம் செய்திருக்கின்றார்கள். விகாஷ் இது பற்றி கூறும் போது, ”நானும் மதம் மாறி திருமணம் செய்து கொண்டவன் தான். அவர்கள் கொண்டு வந்திருந்த ஆவணங்களில் தன்வியின் பெயருக்குப் பின்னால் ஷஜியா அனாஸ் என்று இருந்த காரணத்தால் தான் அவர்களின் பெயரை மாற்றச் சொல்லி பரிந்துரை செய்தேன். ஏன் எனில் அது தான் சரியாக இருக்கும். யாருடைய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி யார் பயணிக்கின்றார்கள் என்பதை அது கொண்டு தான் முடிவு செய்ய முடியும்” என்றும் கூறினார்.
விகாஷிற்கு ஆதரவாக நிறைய ட்விட்டர் பயனாளிகள் #ISupportVikasMishra என்று டிவீட் செய்து தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படையாக தெரிவித்திருந்தார்கள். இதனை லைக் மற்றும் ஷேர் செய்த சுஷ்மா ஸ்வராஜ், ”நான் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு இப்போது தான் வந்தேன். எனக்கு இங்கு என்ன நடந்தது என்பதே தெரியாது. ஆனால் இந்த ட்வீட்களால் நான் மிகவும் மகிழ்கின்றேன்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
41 முக்கிய மாநில மற்றும் மத்திய பாஜக அரசியல்வாதிகள், ட்ரோல் ட்வீட் செய்தவர்களை ஃபாலோ செய்து வருகின்றார்கள். பிரதமர் நரேந்திர மோடி அதில் எட்டு பேரை ஃபாலோ செய்து வருகின்றார். 169 அக்கவுன்ட்களில் இருந்து வந்த 211 ட்வீட்களை பட்டியலிட்டிருந்தார் சுஷ்மா. அதில் 18 அக்கவுண்ட்களை ஒன்றுக்கும் மேற்பட்ட பாஜக எம்பிக்கள் பாலோ செய்துவருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ட்ரோல்களாக எடுத்துச் செல்லாமல், மிகவும் சென்ஸ்டிவான விஷயமாக ஒரு அமைச்சரால் எடுத்துக் கொள்ளப்பட்டது இது தான் முதல்முறை.
இதையையும் பெரிய அளவில் பிரச்சனையாக்கி இருக்கின்றார்கள் நெட்டிசன்கள். “உங்களுடைய ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான செயல்களை நாங்கள் பாராட்டுகின்றோம். அதே போல் தவறென்றால் சுட்டிக் காட்டுகின்றோம். அதனை திருத்திக் கொள்வதைவிட்டு, அவர்களை பாஜகவிற்கு இனம் காட்டிக் கொண்டிருக்கின்றீர்கள்” என்றும் கூறியிருக்கின்றார்கள்.