Advertisment

Sushma Swaraj Death News : விடைப்பெற்றார் சுஷ்மா.. அரசு மரியாதையுடன் உடல் தகனம்.

Sushma Swaraj News: சுஷ்மா ஸ்வராஜ் தான் இந்தியாவின் முதல் முழுநேர பெண் வெளியுறவு மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sushma Swaraj News

Sushma Swaraj News

Sushma swaraj: முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும்,பாஜக கட்சியின் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் புதுடில்லியில் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற முக்கிய தலைவர்கள்  சுஷ்மா ஸ்வராஜுக்கு இறுதி மரியாதை வருகின்றனர். அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், பிரதமர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.

2014-2019 ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய சுஷ்மா ஸ்வராஜ், 2019 மக்களவைத் தேர்தலில் இருந்து உடல் நலக் குறைவால் விலகினார். மேலும் புதிய அமைச்சரவையிலும் பங்கு பெறவில்லை. அவர் தான் இந்திய நாட்டின் முதல் முழுநேர பெண் வெளியுறவு மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

Live Blog

சுஷ்மா ஸ்வராஜின் இறுதி சடங்குகள் லோதி தகனத்தில் செய்யப்படும்.

தகவல்களை உடனுக்குடன் பெற இந்த live updates-ஐ பின்பற்றவும்.














Highlights

    16:49 (IST)07 Aug 2019

    சுஷ்மா ஸ்வராஜூக்கு முழு அரசு மரியாதை!

    குண்டுகள் முழுங்க முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது.

    16:43 (IST)07 Aug 2019

    விடைப்பெற்றார் சுஷ்மா!

    மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

    16:31 (IST)07 Aug 2019

    அமெரிக்க தூதரகம் இரங்கல்!

    வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் சிறந்த இந்திய பிரதிநிதியாக செயல்பட்டவர் சுஷ்மா ஸ்வராஜ். இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்த முக்கிய பங்காற்றியவர் . அவரின் மறைவு ஈடுசெய்ய  முடியாத இழப்பு என டெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. 

    16:29 (IST)07 Aug 2019

    இறுதி அஞ்சலி!

    மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடலுக்கு பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் கண்ணீருடன் அஞ்சலி. 

    15:49 (IST)07 Aug 2019

    அரசு மரியாதை!

    பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட   சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.  தேசிய கொடியை  போர்த்தியை காவல்துறையினர் இறுதி மரியாதை செலுத்தினர். 

    15:45 (IST)07 Aug 2019

    கண்ணீரில் குடும்பத்தினர்!

    சுஷ்மா ஸ்வராஜின் இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு அவரின் கணவர் மற்று மகள் இருவரும் கண்ணீருடன் சுஷ்மாவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். 

    15:36 (IST)07 Aug 2019

    சுஷ்மா ஸ்வராஜ் இறுதி ஊர்வலம்!

    சுஷ்மா ஸ்வராஜின் இறுதி ஊர்வலம் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கியது.

    15:06 (IST)07 Aug 2019

    சுஷ்மா ஸ்வராஜின் அரசியல் ஆளுமை!

    தமது நல்ல நண்பரான சுஷ்மா சுவராஜின் திடீர் மறைவு செய்தி தமக்கு ஆழ்ந்த துக்கத்தை அளித்ததாக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சா​ஹித் தெரிவித்துள்ளார். சிறந்த ராஜதந்திரி, ராஜதந்திர சமநிலையை மதிப்பவர், பழகுவதற்கு இதமான மனிதர் என்றும் தெரிவித்துள்ள அப்துல்லா சா​ஹித், இருநாடுகள் இடையிலான உறவு மீண்டும் துளிர்க்க காரணகர்த்தாவாக இருந்தவர் என்றும், அவர் ஆன்மா அமைதியில் துயில்கொள்ளட்டும் என்றும் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    15:02 (IST)07 Aug 2019

    துணை முதல்வர் இரங்கல்!

    நாட்டு மக்கள் மீது பேரன்பு கொண்ட சுஷ்மா ஸ்வராஜை இழந்துவாடும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்  என  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    14:52 (IST)07 Aug 2019

    மு.க ஸ்டாலின் இரங்கல்!

    சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி.

    14:49 (IST)07 Aug 2019

    ராகுல் காந்தி நேரில் அஞ்சலி!

    டெல்லியில் காலமான முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு இன்று  ராகுல் காந்தி நேரில்  சென்று அஞ்சலி செலுத்தினார். 

    14:18 (IST)07 Aug 2019

    மாலை 4 மணிக்கு மேல் சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு இறுதிச் சடங்கு

    பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பாஜக தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். மாலை 4 மணிக்கு மேல் லோதி தகனமேடையில் சுஷ்மா ஸ்வராஜின் இறுதிச்சடங்குகள் நடைபெறும்.

    13:24 (IST)07 Aug 2019

    உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அஞ்சலி

    பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் அஞ்சலி செலுத்தினார்.

    13:16 (IST)07 Aug 2019

    சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பாஜக தலைவர் அமித்ஷா அஞ்சலி

    பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்ட சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா மற்றும் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    13:04 (IST)07 Aug 2019

    சுஷ்மா ஸ்வராஜின் உடல் பாஜக தலைமை கொண்டு செல்லப்பட்டது

    மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் டெல்லி பாஜக தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    12:59 (IST)07 Aug 2019

    சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு சீனத் தூதர் சன் வீடோங் இரங்கல்

    இந்தியாவிற்கான சீனத் தூதர் சன் வீடோங், சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானதை அறிந்து வருத்தமாக உள்ளது. அவர் சீனா - இந்தியா உறவுகளுக்கு அவர் செய்த பங்களிப்புகளைப் பாராட்டுகள். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    12:43 (IST)07 Aug 2019

    சிங்கப்பூர் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு இரங்கல்

    சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்

    சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் 'அன்பான நட்பை' நினைவு கூர்ந்தார், மேலும் அவர் உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும், இந்திய குடிமக்களுக்காக அயராது போராடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    பாஜகவின் மூத்த தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பாலகிருஷ்ணன், “நான் அவரை எண்ணற்ற முறை சந்தித்துள்ளேன். அவருடைய அன்பான நட்பையும் புத்திசாலித்தனமான ஆலோசனையையும் எப்போதும் நினைவு கூர்வேன். அவரது இழப்பால் எங்கள் இதயங்கள் நொறுங்கிப் போயுள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

    12:07 (IST)07 Aug 2019

    ராஜ்யசபா தனது இறுதி மரியாதையை செலுத்தியது

    மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு மற்றும் சபை உறுப்பினர்கள் மறைந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    சபை தலைவர் எம்.வெங்கையா நாயுடு கூறும் போது , "அவரின் மறைவால் , தேசம் ஒரு திறமையான நிர்வாகியையும், திறமையான நாடாளுமன்ற உறுப்பினரையும், மக்களின் உண்மையான குரலையும் இழந்துள்ளது." என்றார்.

    11:45 (IST)07 Aug 2019

    இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இறுதி மரியாதை

    மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் இல்லத்திற்கு வந்து அமித் ஷா தனது இறுதி கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்.

    10:57 (IST)07 Aug 2019

    எல்.கே அத்வானி விரைந்தார்

    எல்.கே அத்வானி சுஷ்மா ஸ்வராஜிற்கு கடைசி மரியாதை செலுத்தினார்.

    பி ஜே பி கட்சியில் அத்வானியின் அரசியல் வாழ்க்கையில் பெரிய ஆதரவாய் இருந்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது

    10:37 (IST)07 Aug 2019

    பிரதமர் கண்ணீர் அஞ்சலி

    சுஷ்மா ஸ்வராஜிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின் பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். கடந்த ஆட்சியின் அவரது அமைச்சரவையில் தான் சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சராய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    10:06 (IST)07 Aug 2019

    அவர்கள் எனக்கு ஒரு தாய் போல இருந்தார்கள் - ஹமீத் நிஹால் அன்சாரி

    மும்பையைச் சேர்ந்த அன்சாரி, 2012-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு ஆன்லைனில் நட்பு கொண்டிருந்த ஒரு பெண்ணைச் சந்திப்பதற்காக சென்றார். அப்போது பாகிஸ்தான் உளவு துறையில் சிக்கினார்.  அதன் தொடர்ச்சியாக,போலி அடையாள அட்டை வைத்திருந்ததற்காக 2015 ல் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இவரை இந்தியாவிற்குத் திரும்ப வைத்ததில் சுஷ்மா ஸ்வராஜின் பங்கு மிகவும் அதிகமானது.

    கடந்த ஆண்டு ஹமீத் நிஹால் அன்சாரி தனது தாயாருடன் சுஷ்மா ஸ்வராஜ்-யை சந்தித்த போது எடுத்த வீடியோவை இங்கே நீங்கள் காணலாம்

    09:43 (IST)07 Aug 2019

    என் வாழ்நாளுக்குள் இதை சாத்திய மாக்கி விட்டீர்கள் - சுஷ்மா ஸ்வராஜின் கடைசி ட்வீட்

    காலமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பதிவில், "ஜம்மு காஷ்மீர் சட்ட மசோதாவை தாக்கல் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றி. என் வாழ்நாளுக்குள் இதை நான் பார்க்க விரும்பினேன்" ,என்றது அவரின் ட்வீட் .

    09:24 (IST)07 Aug 2019

    இரண்டு நாள் அரசு துக்கநாளாக அறிவித்தது டெல்லி அரசு

    சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி முதல்வராக 1998 ல் மிகக் குறுகிய காலம் இருந்தார். அவரது நினைவாக டெல்லி அரசாங்கம் இரண்டு நாள் அரசு துக்கநாளாக அறிவித்தது .  அதன் அறிக்கையில் ,"அரசு சார்பில் இந்த இரண்டு நாட்களுக்கு எந்த கலாச்சர நிகழ்வுகளும் நடத்தப்படாது.  இருந்தலும் , மற்ற அரசு திட்டங்களும்,நடைமுறைகளும் இயல்பாக நடக்கும்" என்று தெரிவித்துள்ளது

    09:07 (IST)07 Aug 2019

    நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஓலி சுஷ்மா ஸ்வராஜுக்கு அஞ்சலி .

    மறைந்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜுக்கு நேபாள பிரதமர் கே பி சர்மா ஓலி அஞ்சலி செலுத்தினார். "இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான திருமதி சுஷ்மா ஸ்வராஜ் காலமானதை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன் . இந்திய அரசிற்கும் , இந்திய மக்களுக்கும், துயரத்தில் வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த இரங்கல் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று உருக்கமாய் கூறினார்.

    08:46 (IST)07 Aug 2019

    பாஜக தலைமையகம் கொண்டு சொல்லப்படும் - தேசிய செயல் தலைவர் ஜே பி நட்டா அறிவிப்பு

    இன்று  காலை 11 மணி வரை அவருடைய உடல் அவரது இல்லத்தில் வைக்கப்படும். அதன் பின்னர் பாஜக தலைமையகமான தீன் தயால் உபாத்யாய மார்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள லோதி தகனமேடையில் இறுதி சடங்குகள் செய்யப்படும் என்று பாஜக தேசிய செயல் தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார் .

    08:23 (IST)07 Aug 2019

    நான் அதிர்ச்சியடைகிறேன்- ராகுல் காந்தி மனவேதனை.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

    அவரது பதிவில், "சுஷ்மா ஸ்வராஜ் ஒரு அசாதாரண அரசியல் தலைவர், ஒரு திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஒரு நிகரில்லா நாடாளுமன்ற உறுப்பினர். சுஷ்மா ஸ்வராஜ் ஜி அவரின் மறைவைப் பற்றின செய்தியால் நான் அதிர்ச்சியடைகிறேன் " என்று சொல்லி இருக்கிறார்.

    08:16 (IST)07 Aug 2019

    புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வருகிறது : நரேந்திர மோடி உருக்கம்.

    இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் , 'இந்திய அரசியலில் ஒரு புகழ்பெற்ற அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. பொது சேவைக்காகவும், ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு குறிப்பிடத்தக்க தலைவரின் மறைவுக்காக இந்தியா வருந்திகிறது . அவருக்கு நிகர் அவர் தான், கோடிக்கணக்கான மக்களுக்கு அவரது வாழ்க்கை உத்வேகம் அளிப்பதாய் உள்ளது' என்று தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

    2016 ஆம் ஆண்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த சுஷ்மா ஸ்வராஜ், உடல் நலக் காரணங்களால் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலைத் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Sushma Swaraj
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment