Advertisment

சுஷ்மா ஸ்வராஜின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள்...

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வாதாடிய ஹரிஷ் சால்விற்கு அவருடைய விருப்பப்படி ரூ.1-ஐ சம்பளமாக அளித்தார் பன்சூரி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sushma Swaraj last wish

Sushma Swaraj last wish

Sushma Swaraj last wish : பாகிஸ்தானில் வந்து உளவு வேலை பார்த்ததாகவும், பிரிவினை வாதத்தை தூண்டியதாகவும் இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தா அரசு 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி கைது செய்தது. விசாரணை முடிவில் அவருக்கு 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம்.

Advertisment

Kulbhushan Jadav case fee

குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவர் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் தான். சர்வதேச நீதிமன்றத்தை அணுகியது இந்தியா. குல்பூஷணுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஹரிஷ் சால்வ் வாதாடினார். அதில் வெற்றியும் பெற்றார். வாதாடுவதற்கு முன்பு, இந்த வழக்கில் வாதாட எனக்கு வெறும் 1 ரூபாய் சம்பளம் கொடுங்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி சுஷ்மா ஸ்வராஜ் ஹரிஷ் சால்விடம் பேசினார். ”நாளை வந்து என்னை நேரில் சந்தித்து உங்களின் சம்பளத்தை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று போனில் கூறினார். ஆனால் அந்த அலைபேசி உரையாடல் முடிந்த வெறும் பத்தே நிமிடங்களில் மாரடைப்பால் அவதியுற்றார் சுஷ்மா ஸ்வராஜ். அன்று இரவே அவரை மரணம் தழுவியது.

அவருடைய இறுதி வேண்டுகோளை அவருடைய மகள் பன்சூரி நிறைவேற்றியுள்ளார். ”குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வாதாடி வெற்றி பெற்ற ஹரிஷ் சால்விற்கு அவருடைய சம்பள பணம் ரூ.1ஐ அளித்து, உன்னுடைய இறுதி வேண்டுகோளை பன்சூரி நிறைவேற்றிவிட்டாள்” என சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கௌஷல் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க : “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” – சுஷ்மாவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்த திருச்சி சிவா…

Sushma Swaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment