/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-11.jpg)
sushma swaraj news
sushma swaraj news : பாரதீய ஜனதா கட்சியின் தீவிர தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடல்நிலை சரியில்லாததால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இருந்த அவருக்கு அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்திய பெண் அரசியல் தலைவர்களில் தனக்கென தனி இடத்தை அமைத்து கொண்டு தன்னிகரற்ற தலைவராக செயல்பட்ட சுஷ்மா ஸ்வராஜின் அரிய புகைப்படத் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு..
Swaraj Last Rites Cremation Today Live Updates
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியான சுஷ்மா ஸ்வராஜ் 2014ம் ஆண்டு மே 26 முதல் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுஷ்மா ஸ்வராஜின் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பு - பாஜக மூத்த தலைவர்கள்
டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக 1998ம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பதவி ஏற்றார். இவரே டெல்லியின் முதல் பெண் முதல்வரும் ஆவர்.
இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார அமைச்சர் பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா ஸ்வராஜ் ஆவார்.
2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.
இளம் வயதிலே அமைச்சரான பெருமை அவருக்கு உண்டு. பா.ஜ.கவின் ஹரியானா மாநிலத்தலைவராக இருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.