டெல்லி ரகசியம்: நாடாளுமன்ற வரலாற்றில் குறுகிய காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்ட டெரெக் ஓ பிரையன்

இருஅவையும் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையனின் இடைநீக்கம் குறுகிய காலத்தில் ஒன்றாக இருக்கலாம் என கூறப்பட்டது

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நிகழ்ச்சி நிரல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தாலும், அதனை ஒரு நாள் முன்பு இன்று(புதன்கிழமை) முடித்திட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பெரும்பாலும் பல எம்பிக்களுக்கு தெரிந்துள்ளது.

அதன்படி, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இருஅவையும் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரையனின் இடைநீக்கம் குறுகிய காலத்தில் ஒன்றாக இருக்கலாம் என கூறப்பட்டது.

அவர் செவ்வாய்க்கிழமை மதியம் அமர்வின் எஞ்சிய பகுதிக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். எதிர்ப்பார்த்தப்படியே இன்று, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த டார்கெட் தெலங்கானா

தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் கட்சியின் தேர்தல் ஆயத்தப் பணிகளை தொடங்கிய வைத்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக அடுத்த இலக்காக தெலங்கானா மாநிலம் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை, பாஜக மாநிலத் தலைவர் பாண்டி சஞ்சய் குமார், மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, மாநிலத்தைச் சேர்ந்த எம்பிக்கள், பாஜக நாடாளுமன்றச் செயலர் பாலசுப்ரமணியம் காமராசு மற்றும் பிற மாநிலத் தலைவர்களுடன் ஷா நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் சந்திப்பு நடத்தினார்.

அடுத்த தேர்தலில் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதைப் பார்க்க கடுமையாக உழைக்குமாறு ஷா அவர்களிடம் கேட்டுக் கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பைக் பேரணி

பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் பஹ்ரைனின் தேசிய தினத்தை சிறப்பாக கொண்டாடியது. பப்ளேஷர் ரைடர்ஸ் என்ற பைக்கர்ஸ் குழுவின் பைக் பேரணியை இந்திய தூதர் பியூஷ் ஸ்ரீவஸ்தவா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஹ்ரைன் ராஜியத்தின் 50வது தேசிய தினத்தைக் குறிக்கும் வகையில், சனாபிஸ் முதல் ஜல்லாக் வரையிலான பேரணியில் 50க்கும் மேற்பட்ட இந்திய பைக்கர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suspension of trinamool congress derek o brien could be one of the shortest ones

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express