Manish Sahu
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள கர்னல்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் தற்போதைய எம்.பி பிரிஜ் பூஷன் சிங்கின் மகனும், பா.ஜ.க வேட்பாளருமான கரண் பூஷன் சிங்கின் வாகனத் தொடரணியில் இருந்ததாகக் கூறப்படும் எஸ்.யூ.வி (SUV) வாகனம் மோதியதில் 19 மற்றும் 24 வயதுடைய இருவர் உயிரிழந்தனர். மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் கரண் பூஷன் சிங் போட்டியிடும் கைசர்கஞ்ச் தொகுதியில் மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆங்கிலத்தில் படிக்க:
இறந்தவர்கள் ஷெசாத் கான் (24) மற்றும் ரெஹான் கான் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர், இருவரும் உள்ளூர்வாசிகள் என்று போலீசார் தெரிவித்தனர்.
எஸ்.யூ.வி.,யை பறிமுதல் செய்த போலீசார், அதன் டிரைவர் லவ்குஷ் ஸ்ரீவஸ்தவாவை கைது செய்தனர்.
கோண்டாவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதே ஷியாம் ராய் கூறுகையில், சம்பவம் எப்படி நடந்தது என்பதை தெரிந்துகொள்வதற்காக ஓட்டுநரின் வாக்குமூலத்தை பதிவு செய்து வருகிறோம் என்று கூறினார். அதை தவிர மேலும் விவரங்கள் எதையும் பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார்.
மற்றொரு காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, புதன்கிழமை காலை நான்கு வாகனங்கள் கொண்ட கரண் பூஷன் சிங்கின் கான்வாய் கர்னல்கஞ்ச் வழியாகச் சென்றது. மூன்று வாகனங்கள் ரயில்வே கிராசிங்கை கடந்து சென்ற போது, விபத்துக்குள்ளான நான்காவது வாகனம், ரயில் ஒன்று கடந்து சென்றதால், பின் தங்கியுள்ளது, ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரயில் கடந்து சென்ற பிறகு, நான்காவது வாகனத்தின் ஓட்டுநர் மற்ற வாகனங்களைப் பிடிக்கும் முயற்சியில் வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. பெட்ரோல் பம்ப் அருகே எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது எஸ்.யூ.வி மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.
சாலை குறுக்கே வந்துக் கொண்டிருந்த வயதான பெண் ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக தவிர்ப்பதற்காக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுபோது மோதி விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த, அந்த பெண் மயங்கி விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குப் பிறகு, எஸ்.யூ.வி டிரைவர் வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர்வாசிகள் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்தவரையும் வயதான பெண்ணையும் அருகிலுள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து, நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதி மக்கள் மருத்துவமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனம் கல்வி நிறுவனத்தின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் உரிமையாளரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“