peddapalli swachh sarvekshan, cleanest district in india
ஸ்ரீனிவாஸ் ஜான்யாலா
Advertisment
2019ம் ஆண்டிற்கான தூய்மை இந்தியா சர்வேயில் இந்தியாவிலே மிகவும் சுத்தமான மாவட்டம் என்ற பெயரை தெலுங்கானாவில் உள்ள பெடப்பள்ளி பெற்றுள்ளது. இந்த வெற்றி, நூற்றுகணக்கான அரசு அதிகாரிகளும், கிராம வாசிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதால் ஏற்பட்ட விளைவாய் உள்ளது.
"சுத்தமான வெள்ளிக்கிழமை ’’(ஸ்வச் சுக்ரவர்) என்ற யுக்தி அம்மாவட்டத்திலுள்ள 263 கிராமங்களிலும் சீராய் நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த யுக்தியின் கீழ், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அடிமட்டத்தில் இருக்கும் அரசாங்க ஊழியர்கள் முதல் மாவாட்ட ஆட்சியாளர் வரை இந்த மாவட்டத்தை சுத்தம் செய்வதற்கான தங்களின் நேரத்தை ஒத்துகுகின்றன. அங்குள்ள கிராம மக்களுடன் ஒன்றிணைந்து குப்பைகளை அகற்றுவது, சமூக கழிப்பறைகளை கட்டுவது, மரங்களை நடுவது போன்ற வேலைகளை திறன்பட செய்துள்ளனர்.
ஒவ்வவொரு வியாழன்யன்றும் எங்களுக்கான அடுத்த நாளுக்கான விவரங்கள் எஸ்எம்எஸ் ல் வந்துவிடும். அனைத்து அதிகாரிகளும் வெள்ளிகிழமை அன்று காலை 6 மணி முதல் 9.30 மணி வரை இம்மாவட்டதிற்காக உழைப்போம், பின் அவரவர் தத்தம் பணிகளுக்கு சென்று விடுவோம், என்று அரசாங்க ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
Advertisment
Advertisement
மிஸ் டிரான்ஸ் குயின் இந்தியா 2019 : சிறப்பு வீடியோ
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவைகளை மிகத் துல்லியாமாகவும், தெளிவாகவும் பயன்படுத்தி, இந்த ஸ்வச் சுக்ரவர் (சுத்தமான வெள்ளிக்கிழமை) வெற்றியாக்கியுள்ளனர்.
இந்த தூய்மை நடவடிக்கையால், இந்த வருட டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பெடப்பள்ளி மாவட்டத்தில், வெறும் 43 என்ற கணிசமான எண்ணிகையில் குறைந்தது. கடந்த வருடம், இதே மாவட்டத்தில் 271 க இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் மட்டும் இந்த வருடத்தில் 5000 டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
மாவட்ட ஆட்சியர் ஏ ஸ்ரீ தேவசேனா இது குறித்து தெரிவிக்கையில், " கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக கழிப்பறைகள் கட்டுவதில் முன்னிரிமைக் கொடுக்கப்பட்டாலும் ,கழிவு நீர்ப்போக்குக் குழி, பொதுவான குப்பைத் தொட்டி உருவாக்குவதிலும் கவனம் செல்லுத்தினோம்" என்றார்.
எங்கெல்லாம் தண்ணீர்தேக்கம் உடைய பகுதியாக கண்டறியப்பட்டதோ, அங்கெல்லாம் கழிவு நீர்ப்போக்குக் குழியை உருவாக்கி, கொசுக்கள் உருவாகும் வாய்ப்பை ஒழித்ததாக, மாவட்ட ஆட்சியரயுன் ஆலோசகர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.