சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு விசாரணையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட தொடர்புடைய அனைத்து நபர்களின் ‘போன் கால்’ பதிவுகளையும் பெறுமாறு டெல்லி காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், “சுவாதி மாலிவால் முதல்வரின் இல்லத்திற்கு வந்த பிறகு பிபவ் குமார் அழைக்கப்பட்டதாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. பிபவ் குமார் யாருடைய வழிகாட்டுதலின் பேரில் அழைக்கப்பட்டார் என்பதை அறிய, முதல்வர் உட்பட சம்பந்தப்பட்ட நபர்களின் ‘போன் கால்’ பதிவுகளை (சி.டி.ஆர்) எடுக்குமாறு, தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மாவிடமிருந்து டெல்லி காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக, மாலிவாலுக்கு பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இந்திய தண்டனைச் சட்டம், 1860-ன் தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட வேண்டும். விரிவான அறிக்கை 3 நாட்களில் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Bibhav Kumar to move Delhi HC against denial of bail by Tis Hazari court in Swati Maliwal assault case
முன்னதாக, சுவாதி மாலிவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் ஜாமீன் மனுவை திஸ் ஹசாரி நீதிமன்றம் விசாரித்தது. பிபவ் குமாரின் வழக்கறிஞருக்குப் பிறகு நீதிமன்றத்தில் பேசிய மாலிவால் கூறியதாவது: என்னை பா.ஜ.க ஏஜென்ட் என்று சொல்லி, பிபவ் கைது செய்யப்பட்டபோது அவரை ஹீரோவாக சித்தரித்தார்கள். பிபவ் குமாரின் வக்கீல் என் ஹரிஹரன், இந்த வழக்கில் புகார் அளிக்க 3 நாட்கள் தாமதம் ஆனதாகக் கூறினார்.
தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தனது இடைக்கால ஜாமீனை 7 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் ஏழு கிலோ எடை குறைந்துள்ளதாகவும், அவரது உடலில் கீட்டோன் அளவு அதிகமாக இருப்பதாகவும் கூறிய ஆம் ஆத்மி கட்சி, “இது சில தீவிர நோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம். மேக்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். அவருக்கு பி.இ.டி - சி.டி ஸ்கேன் மற்றும் பல பரிசோதனைகள் செய்ய வேண்டும். விசாரணையை முடிக்க 7 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக மே 10-ம் தேதி ஜாமீன் பெற்ற முதல்வர், ஜூன் 2-ம் தேதி சரணடைய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“