/indian-express-tamil/media/media_files/syRYV2XsFw1F3MyASqZk.jpg)
அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் குமார், 'வயிறு, மார்பில் குத்தினார்' என ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் தாக்கப்பட்டார். அவரை அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய உதவியாளர் பிகப் குமார் என்பவர் தாக்கியதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் எம்.பி ஸ்வாதி மாலிவாலிடம் வாக்கு மூலங்களை பெற்றனர்.
இந்த வழக்கில் குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் தகவல் அறிக்கை தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதில், ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட தினத்தில் அவருக்கு மாதவிடாய் இருந்தது என்றும் அன்றைய தினம் வயிறு மற்றும் மார்பு பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகினேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், குமார் அவரை எட்டி உதைத்தாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்வாதி மாலிவால் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “இந்தக் கடினமாக காலங்களில் எனக்காக பிரார்த்தித்தவர்களுக்கு நன்றி. இது எனக்கு மிகவும் கடினமாக காலம்” எனத் தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் பாரதிய ஜனதாவினரிடம் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் குமாருக்கு சம்மனும் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : ‘Slapped 7-8 times, kicked on chest and pelvis area’: Swati Maliwal in FIR against Kejriwal aide Bibhav Kumar
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.