சென்னையில் உள்ள வயதான தம்பதிகள் தங்களது மகனை தொடர்பு கொள்ள இயலாத போது ஸ்விகி டெலிவரி செய்யும் நபர் அவர்களுக்கு உதவியுள்ளார்.
இந்த காலத்தில் ஸ்விகி, சோமாட்டோ என்று பல உணவு டெலிவரி செயலிகள் உள்ளது. இது பல வகையில் நன்மைகளை ஏற்படுத்துகிறது. இருந்தும் சில நேரம் கசாப்பான அனுபவங்களை வழங்கி உள்ளது. உணவு தாமதமானதால் கடுமையாக பேசிய வாடிக்கையாளரை டெலிவரி ஊழியர் தாக்கிய செய்திகளும். அதேவேளையில் இஸ்லாமியர்கள் டெலிவரி ஊழியர்களாக வேலை செய்ய வேண்டாம் என்று வாடிக்கையாளர்களே தெரிவித்த செய்திகளும் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த செய்தியில் ஸ்விகி டெலிவரி செய்யும் நபர் , வயதான தம்பதிக்கு உதவியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் நபர் ஒருவர் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சென்னையில் வசித்து வரும் வயதான தம்பதிகள் கடந்த 2 நாட்களாக சிக்கந்தராபாத்தில் இருக்கும் மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள், என்ன செய்வது என்று தெரியாமல், மகன் இருக்கும் முகவரிக்கு உணவு ஆடர் செய்துள்ளனர்.
ஆனால் ஸ்விகி டெலிவரி செய்யும் நபரால் அவரது சரியான முகவிரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் அந்த தமதியின் உறவினாராக இருக்கும் ஒரு தாயின் உதவியோடு அந்த ஊழியர் முகவரியை தேடி கண்டுபிடித்துள்ளார். மேலும் அங்கு சென்று பார்த்தபோது, அவர்களது மகனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதை தெரிவித்தால் அவரது பெற்றோர் வருத்தம் அடைவார்கள் என்பதால் அவர் சொல்லவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர் உடல் நிலை தற்போது தேரியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ட்விட்டர் பதிவு பலரால் பகிரப்பட்டு வருகிறது.