சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் யார் யார்? விரைவாக பட்டியல் வெளியிடப்படும்!

73 நாட்டு கணக்கர்களின் தகவல்களை அந்தந்த நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளது சுவிஸ் வங்கி

By: July 10, 2019, 1:55:53 PM

Ritu Sarin

Swiss bank Indian account holders details : இந்தியா மற்றும் சுவிஸ் நாடுகளுக்கு இடையேயான தகவல்கள் மாற்றம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை வெளியிட உள்ளது சுவிஸ் அரசு.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், சுவிஸ் நாட்டின் நிதி அமைச்சகத்திற்கும், சுவிஸ் ஃபெடரல் டாக்ஸ் அட்மினிஸ்ட்ரேசன் (Swiss Federal Tax Administration) அமைப்பிடம் கேட்டது. அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் இந்தியா விவகாரத்தில் சில அடிப்படை தகவல்களை பகிர்ந்துகொள்வதன் தேவை ஏற்பட்டிருப்பதாகவும், சுவிஸ் நாட்டில் உள்ள வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்களை இந்தியாவின் வரித்துறை அதிகரிகளுக்கு வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

36 நாடுகளுடன் தகவல் பரிமாற்று ஒப்பந்தத்தில் ( Automatic Exchange of Information (AEOI) agreement) கடந்த ஆண்டு மட்டும் ஸ்விட்சர்லாந்து கையெழுத்துட்டுள்ளது. இந்த வருடத்தில் சுவிஸ் வங்கியில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 73 நாட்டு கணக்கர்களின் தகவல்களை அந்தந்த நாட்டுடன் பகிர்ந்து கொள்ள உள்ளது சுவிஸ் வங்கி.  இந்த தகவல்களை பெறுவதற்கான சட்டமன்ற, நாடாளுமன்ற அனுமதியை பெறுவதற்கு ஆயத்த வேலைகள் சீராக நடைபெற்று வருகிறது.

To read this article in English: Swiss banks accounts: Indian details to be transferred

இந்தியா மற்றும் சுவிஸ் நாடுகளுக்கான நல்லுறவின் மிக முக்கியமான மைல் ஸ்டோனாக இந்த தகவல் பரிமாற்றம் இருக்கும் என்று சுவிஸ் நாட்டு நிதி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

AEOI ஒப்பந்தத்தின் கீழ் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர் மற்றும் இதர தகவல்களை பெற அனைத்து வகையிலும் தயாராக இருக்கின்றோம் என்று Foreign Taxation & Tax Research – துறையின் மூத்த அதிகாரிகள் அறிவிக்கின்றனர். அவர்கள் அறிவிக்கின்ற தகவல்களின் அடிப்படையில், கணக்கர்களின் டாக்ஸ் ரிட்டன்ஸ் கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்றவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்

ஒவ்வொரு நாட்டுடன் AEOI ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் போது சுவிஸ் நாட்டு பாராளுமன்றம் அதற்கு ஒப்புதழ் அளிக்க வேண்டும். இந்தியாவிற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு நவம்பர் 2016ல் சுவிஸ் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு, டிசம்பர் 2017ல் அனுமதி பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Swiss bank indian account holders details to be transferred soon

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X