ராகுல்காந்தியின் டி- ஷர்ட் தர்மலால் (thermal) ஆனது என்றும் காங்கிரஸ் கட்சியினர் பொய்களை பேசி ஆதாயம் தேடுகின்றனர் என்று பாஜக விமர்சித்துள்ளது. இந்நிலையில் ’பக்தர்கள் ஒரு நம்பிக்கையற்ற பிறவிகள்’ என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
நாடு முழுவதும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடும் குளிரிலும் டி- ஷார்ட் அணிந்து நடந்து செல்கிறார் என்று பலரால் வியப்பாக பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவினர் தொடர்ந்து அவரது டி-ஷர்ட் தொடர்பான விவாதத்தை உருவாக்கி வருகின்றனர்.
இநிந்லையில் பாஜகவைச் சேர்ந்த மஞ்சிந்தர் சிங் சிர்ஸா ராகுல் காந்தியை விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். “பூனை வெளியே வந்தது. ராகுலின் டி-ஷர்ட் தர்மலால் ஆனது. இதனால் அவரால் குளிரை தாங்கிக்கொள்ள முடிகிறது. காங்கிரஸ் ஒரு ஏமாற்று வேலையை காட்டுகிறது. ராகுலின் பொய் பிரச்சாரம் இதன் மூலம் அம்பலபட்டுவிட்டது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டில் ராகுலின் டி-ஷர்ட் தொடர்பான புகைப்படங்களும் இடம் பெற்றன.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா “ பக்தர்கள் அனைவரும் ஒரு நம்பிக்கையற்ற பிறவிகள். அவர்கள் ராகுல்காந்தியின் கழுத்து, மார்பகம் மற்றும் சட்டையில் இருக்கும் சுருக்கங்களை புகைப்படம் எடுத்து விமர்சிக்கின்றனர்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் வெள்ளை டி-ஷர்ட் தொடர்பான சர்ச்சைகள் ஆரம்பத்தில் இருந்து தொடங்கிவிட்டன. முன்னதாக ராகுல் காந்தி Burberry டி-ஷர்ட் அணிந்திருக்கிறார் என்றும் அதன் விலை ரூ.41,000 என்று பாஜகவினர் விமர்சித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல்காந்தி பேசும்போது “ நான் குளிரை பார்த்து அஞ்சவில்லை” என்று தெரிவித்திருந்தார்.