உலகின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவரும், 5 முறை கிராமி விருது வென்ற, தப்லா மேஸ்ட்ரோ ஜாகிர் ஹுசைன் (73) உடல்நலக்குறைவால் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் பாதிப்பால் அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
Read In English: Tabla maestro Zakir Hussain passes away at 73, family confirms
இது குறித்து அவரது குடும்பத்தினர், மனைவி, அன்டோனியா மின்னெகோலாவால், அவரது மகள்கள், அனிசா குரேஷி (அவரது கணவர், டெய்லர் பிலிப்ஸ் மற்றும் அவர்களது மகள், ஜாரா) மற்றும் இசபெல்லா குரேஷி; அவரது சகோதரர்கள், தௌபிக் குரேஷி மற்றும் ஃபசல் குரேஷி; மற்றும் அவரது சகோதரி குர்ஷித் ஆலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாகிர் ஹுசைன் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற இசை ஆர்வலர்களால் போற்றப்படும் ஒரு அசாதாரண பாரம்பரியத்தை அவர் விட்டுச் செல்கிறார், இது தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.
1951 இல் பிறந்த ஜாகிர் ஹுசைன் 1988-ம் ஆண்டுபத்மஸ்ரீ, 2002-ம் ஆண்டு பத்ம பூஷன், மற்றும் 2023-ம் ஆண்டு பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றார். இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கலைஞர்களுக்கான சங்கீத நாடக அகாடமி விருதையும், பின்னர் சங்கீத நாடகத்தையும் பெற்றவர். அகாடமி பெல்லோஷிப், 40 கலைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வாழ்நாள் கௌரவம். அமெரிக்காவில், ஜாகிர் உசேனுக்கு தேசிய பாரம்பரிய பெல்லோஷிப் வழங்கப்பட்டது
1999 இல் தேசிய கலைக்கான அறக்கட்டளையால், பாரம்பரிய கலைஞர்களுக்கான நாட்டின் மிக உயர்ந்த வாழ்நாள் மரியாதைக்கான விருது, 2017 ஆம் ஆண்டில், இசை உலகில் அவரது ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக எஸ்.எஃப் ஜாஸ் (SFJazz) வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், "மனிதகுலத்தின் இசை பாரம்பரியம், ஒப்பற்ற இசைத் தேர்ச்சி ஆகியவற்றுக்கான நீடித்த பங்களிப்பு மற்றும் சமூககத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர் என்ற வகையில் அவருக்கு ஆகா கான் விருது வழங்கப்பட்டது.
பழம்பெரும் தபலா மாஸ்டர் உஸ்தாத் அல்லரகாவின் மகனான ஜாகிர் ஹுசைன், 2009 ஆம் ஆண்டு சமகால உலக இசை ஆல்பம் பிரிவில் கிராமி விருதை வென்றார். தி பீட்டில்ஸ் உட்பட பல மேற்கத்திய இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதற்காக நன்கு அறியப்பட்ட இவர், இந்த ஆண்டு 66வது கிராமி விருதுகளில், ஒரே இரவில் மூன்று கோப்பைகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தத் தலைமுறையின் மிகச்சிறந்த தபேலா வாசிப்பாளராக பரவலாகக் கருதப்படும் ஜாகிர் ஹுசைன், ரவி சங்கர், அலி அக்பர் கான் மற்றும் ஷிவ்குமார் ஷர்மா உட்பட எல்லா காலத்திலும் சிறந்த இந்திய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். யோ-யோ மா, சார்லஸ் லாயிட், பெலா ஃப்ளெக், எட்கர் மேயர், மிக்கி ஹார்ட், ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் ஜான் மெக்லாலின் ஆகியோருடன் இணைந்து இந்திய பாரம்பரிய இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்றவர் ஜாகிர் ஹுசைன்.
அவரது தாளத்தின் தேர்ச்சி அவரை சுதந்திரமாக எல்லைகளை கடக்கவும் பல்வேறு இசை வகைகளுக்கு இடையே உண்மையான தொடர்புகளை உருவாக்கவும் வழி செய்தது. தபலா மேஸ்ட்ரோ ஒரு சிறந்த இசையமைப்பாளராக இருந்து, இசை நிகழ்ச்சிகளை உருவாக்கினார், திரைப்படங்களுக்கு இசைமமைத்த இவர், அலோன்சோ கிங்ஸ் லைன்ஸ் பாலே மற்றும் தி மார்க் மோரிஸ் டான்ஸ் குரூப் போன்ற நடன நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
"ஆசிரியர், வழிகாட்டி மற்றும் கல்வியாளராக பணியாற்றி, திறமையான எண்ணற்ற இசைக்கலைஞர்களுக்கு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். அடுத்த தலைமுறையினர் மேலும் முன்னேற ஊக்கமளிக்க வேண்டும் என்று நம்பிய அவர், ஒரு கலாச்சார தூதர் மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவராக இணையற்ற பாரம்பரியத்தை விட்டு சென்றுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.