Advertisment

தப்லிக் வழக்கு: மோசமான பிரமாணப் பத்திரத்துக்கு மத்திய அரசை விமர்சித்த சுப்ரீம் கோர்ட்

தப்லிக் ஜமாத் தொடர்பாக உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த தவிர்க்கக்கூடிய இங்கிதமில்லாத பிரமாணப்பத்திரத்துக்காக உச்ச நீதிமன்றம் லேசாக விமர்சித்துள்ளது.

author-image
WebDesk
New Update
tablighi jamaat, surpeme court tablighi jamaat, தப்லிக் ஜமாஅத், தப்லிக் வழக்கு, உச்ச நீதிமன்றம், centre affidavit on tablighi jamaat, tablighi jamaat coronavirus, கொரோனா வைரஸ், tablighi jamaat delhi

தப்லிக் ஜமாத் தொடர்பாக உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த தவிர்க்கக்கூடிய இங்கிதமில்லாத பிரமாணப்பத்திரத்துக்காக உச்ச நீதிமன்றம் லேசாக விமர்சித்துள்ளது.

Advertisment

டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் கோவிட்-19 பரவியது தொடர்பாக இனவாத நோக்கில் சித்தரித்தாக கூறப்படும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஜாமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் பலர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இளநிலை அதிகாரி ஒருவர் இந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததையடுத்து, அது இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிடுதல் தொடர்பாக தேவையற்ற மற்றும் முட்டாள்தனமான அவதூறுகள் அடங்கியுள்ளன என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷா மேத்தாவை நீதிபதிகள் அமர்வு கண்டித்தது.

இதுபோன்ற வழக்குகளில் உள்நோக்கம் கொண்ட ஊடக செய்திகளைத் தடுக்க கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களுடன் செயலாளர் அளவில் உள்ள அதிகாரியிடம் இருந்து பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் வேண்டும் என்று கூறினார்கள்.

“நீங்கள் அதை எவ்வாறு நடத்துகிறீர்களோ அதேபோலநீங்கள் நீதிமன்றத்தை நடத்த முடியாது. பிரமாணப் பத்திரம் சில இளநிலை அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரமாணப் பத்திரம் தவிர்க்கக்கூடிய மற்றும் மனுதாரர் மோசமாக செய்தி வெளியிடப்பட்ட எந்த நிகழ்வையும் காட்டவில்லை என்று கூறுகிறது. நீங்கள் ஒப்புக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், மோசமாக செய்திகள் வெளியிடப்பட்ட நிகழ்வுகள் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்ல முடியும்? அமைச்சக செயலாளர் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இப்போது செய்யப்பட்டுள்ள தேவையற்ற மற்றும் முட்டாள்தனமான செயல்களைத் தவிர்க்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கூறினார்.

ஜமாஅத் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே நீதிமன்றத்தில், மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் மனுதாரர்கள் பேச்சு கருத்துச் சுதந்திரத்தை மூடிமறைக்க முயற்சிப்பதாகக் கூறியுள்ளது.

“பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் சமீப காலங்களில் மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட உரிமை” என்று நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

“அவர்கள் விரும்பும் எந்தவொரு வாதத்தையும் முன்வைக்க நீங்கள் சுதந்திரமாக இருப்பதைப் போல, அவர்கள் தங்கள் பிரமாணப் பத்திரத்தில் எந்தவொரு வெறுப்பையும் செய்ய சுதந்திரமாக உள்ளனர்” என்று அது மேலும் கூறியது.

இதையடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் சில பிரிவுகளால் நிஜாமுதீன் மார்க்காஸ் பிரச்சினையை வகுப்புவாதமாக்குவதாக ஜாமியத் உலமா-இ-ஹிந்த் ஏப்ரல் 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 7 ம் தேதி மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது. ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்களிடையே கோவிட் -19 பரவுதல், சில பிரிவுகளால் சுகாதார ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை அனைத்தும் உண்மையான விஷயங்கள் என்றும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட செய்திகளை… தணிக்கை செய்ய முடியாது.” தெரிவித்திருந்தது.

மேலும், அது கூறுகையில், “இந்த மனு குறைப்பிட்ட சில பிரிவு ஊடகங்களுக்கு எதிராக சில செய்தி செய்திகளை பெயரிடாமல் குறிப்பிட்ட செய்திகளை வெளிட்டதற்கு எதிராக குறைகளை எழுப்பியுள்ளன” என்று கூறியது. அதற்கு பதிலாக, முழு ஊடகங்களும் முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாத ஒற்றுமையையும் வெறுப்பையும் செய்கின்றன என்று வாதிடுவதற்கு இது சில பொய்யான செய்தி அறிக்கைகளை மட்டுமே நம்பியுள்ளது. எனவே அது தணிக்கை செய்யப்பட வேண்டும் வேண்டும்” அரசு கூறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment