/tamil-ie/media/media_files/uploads/2020/09/taj.jpg)
Taj Mahal reopened today after 6 months of lockdown : கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் பலரும் பொதுவெளியில் பயணிக்க, சுற்றுலா தளங்களுக்கு செல்ல, மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டம் செல்ல என்று பல்வேறு விதமான தடைகள் அமல்படுத்தப்பட்டது.
அமல்படுத்தப்பட்ட தடைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்பட்டு இயல்பு வாழ்விற்கு திரும்பி வருகிறது இந்தியா. கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பொருளாதார தேவைகளுக்காக ஊரடங்கு நீக்கப்பட்டது.
6 மாதங்கள் கழித்து தாஜ்மகால் இன்று திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் 17ம் தேதியில் இருந்து பொதுமக்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சுற்றுலாப் பயணிகள் தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.
உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக் செய்தவர்கள் மட்டுமே நாள் ஒன்றுக்கு 5000 பேர் என்ற ரீதியில் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.