டெல்லி ரகசியம்: பாலிவுட் ரசிகன்… ஓம் பிர்லாவிடம் பாட்டு பாடி அசத்திய தஜிகிஸ்தான் அமைச்சர்

ஆராதனா படத்தின் ரூப் தேரா மஸ்தானா பாடலையும் சிரோஜிதீன் முஹ்ரிதின் பாடி அசத்தியுள்ளார். இருவரும் பாலிவுட் தொடர்பாக நீண்டு நேரம் கலந்துரையாடியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை தஜிகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சிரோஜிதீன் முஹ்ரிதின் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தான் பாலிவுட் திரைப்படங்களின் ரசிகன் என்றும், தனக்குப் பிடித்த நடிகர் தர்மேந்திராதான் என கூறியுள்ளார்.

இதை கேட்ட பிர்லா, தர்மேந்திராதானின் மனைவி ஹேமா மாலினி அவரது மகன் சன்னி தியோல் ஆகிய இருவரும் எம்.பி.க்கள் என கூறியுள்ளார். தொடர்ந்து, ஆராதனா படத்தின் ரூப் தேரா மஸ்தானா பாடலையும் சிரோஜிதீன் முஹ்ரிதின் பாடி அசத்தியுள்ளார். இருவரும் பாலிவுட் தொடர்பாக நீண்டு நேரம் கலந்துரையாடியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, புத்தர்-ராஜாவோன் கா ராஜா தொடரில் புத்தராக நடித்த நடிகர் ஹிமான்ஷு சோனி மீது அன்பை மங்கோலிய தூதுர்கள் சபாநாயகரிடம் தெரிவித்தனர்.

மோடி அட்வைசால் பலனடைந்த அமைச்சர்

பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்களுக்கு இளைஞர்களைச் சென்றடைவதற்காக சுற்றுப்பயணம் செய்ய அறிவுறுத்தியிருந்தார். மோடியின் அட்வைஸ் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பலனடைந்ததாக தெரிகிறது.

இவர் இம்மாத தொடக்கத்தில் துபாயில் இருந்தபோது, பாய் எக்ஸ்போவின் இந்தியா ஸ்டாலில் ஒரு இளம் தொழில்முனைவோரை சந்தித்துள்ளார். அப்போது, அந்த இளைஞர் அமைச்சரிடம் தனியாக சந்தித்து பேச விரும்புவதாக கூறியுள்ளார். இந்தியா வந்தால் நிச்சயம் பேசலாம் என அமைச்சரும் உறுதியளித்துள்ளார்.

இந்த வார இறுதியில் ஒரு ஸ்டார்ட்-அப் திறப்பு விழாவிற்காக லக்னோ சென்ற சந்திரசேகர், அதே இளைஞரை சந்தித்துள்ளார். பின்னர் அவர் ஆசைப்படியே தனியாக சந்தித்து, அவருக்கு தேவையான உதவிகளை செய்திட முயற்சித்தார். சுற்றுப்பயணம் மேற்கொள்வதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

துணைக் குடியரசுத் தலைவரின் பிரைவேட் விசிட்

நாட்டின் துணைக் குடியரசுத் தலைவர் ஒரு சாதாரண குடிமகனாக ஒரு நாளை கொண்டாடுவது அரிதான நிகழ்வாகும். அந்த வாய்ப்பு வெங்கையா நாயுடுவுக்கு கிடைத்துள்ளது. வார இறுதியில், தேசிய தலைநகரில் தனியார் பல்கலைக்கழகத்தில் தனது பேத்தி இம்மானி சுஷ்மா சவுத்ரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். மனைவியுன் தனிப்பட்ட முறையில் பல்கலைக்கழகம் சென்ற அவரை, உரையாற்றுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அழைக்கப்பட்டது. அப்போது அவர்,கல்விக்கு சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் உள்ளது என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tajikistan foreign minister sirojiddin muhriddin fan of bollywood movies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express