முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா, பாலியல் புகார்கள் தொடர்பாக அவரது பேரனும், ஜே.டி.எஸ்., எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சனிக்கிழமை தெரிவித்தார்.
சனிக்கிழமை தனது 91-வது பிறந்தநாளைக் கொண்டாடும் தேவகவுடா, பிரஜ்வல் ரேவண்ணாவை விட்டுவிடக் கூடாது என்று செய்தியாளர்களிடம் கூறினார். இருப்பினும், பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை மற்றும் ஜே.டி.எஸ் எம்.எல்.ஏ ஹெச்.டி ரேவண்ணா மீதான வழக்குகள் பொய்யானவை என்று தேவகவுடா குற்றம் சாட்டினார்.
“எச்.டி.குமாரசாமி ஏற்கனவே எங்கள் முழு குடும்பத்தின் சார்பாக பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் எச்.டி.ரேவண்ணா பற்றி பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார். சட்டத்தின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது அரசின் பொறுப்பு. ஆனால், எச்.டி. ரேவண்ணா மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இப்போது மக்களுக்குத் தெரியும்” என்று தேவகவுடா கூறினார்.
கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் தனது பெங்களூரு இல்லத்தை விட்டு தேவகவுடா வெளியே வரவில்லை. முன்னதாக தேவகவுடா பா.ஜ.க-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக பிரச்சாரம் செய்தார்.
ஏப்ரல் 26 ஆம் தேதி, தேவகவுடா ஹாசன் மாவட்டத்திற்கு உட்பட்ட படுவலஹிப்பே கிராமத்தில் வாக்களித்தார். பாலியல் துஷ்பிரயோக வீடியோக்கள் வெளிவரத் தொடங்கிய அடுத்த நாளே, பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறினார்.
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்கள் தொடர்பான கடத்தல் வழக்கில் மே 4 ஆம் தேதி ஹெச்.டி ரேவண்ணா கைது செய்யப்பட்டார். பின்னர் மே 14 அன்று ஹெச்.டி ரேவண்ணா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
“எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இதில் (பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள்) எந்த ஆட்சேபனையும் இல்லை... பலர் இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளனர், நான் யாருடை பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று தேவகவுடா குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“