Advertisment

சீர்திருத்தம் நோக்கிய மாற்றங்களை செய்யவே எங்களது 303 இடங்கள் பெரும்பான்மை: தோமர்

பண மதிப்பிழக்கத்திற்கு பிறகு மோடி அரசு கவிழும் என்றார்கள் 2019ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தோம்.

author-image
WebDesk
New Update
சீர்திருத்தம் நோக்கிய மாற்றங்களை செய்யவே எங்களது 303 இடங்கள் பெரும்பான்மை: தோமர்

Harikishan Sharma , P Vaidyanathan Iyer

Advertisment

Narendra Singh Tomar: Talks still on, our 303-seat mandate for change, to push (farm) reforms : அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செவ்வாய் கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் அவர்,   இந்த சட்டங்களை நிறைவேற்ற தேவையான பெரும்பான்மை குறித்தும் அவர் பேசினார். . மேலும் அரசு அதிகாரத்தில் இருக்க மட்டும் அல்லாமல் மாற்றங்களை கொண்டுவரவும் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

எதிர்ப்புகளை பெற்ற பணமதிப்பிழக்க நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற சீர்திருத்தங்களை மேற்கோள் காட்டிய தோமர் அந்த சட்டங்கள் ட்ரான்ஸ்ஃபர்மேட்டிவ் என்று கூறியதோடு அது 2019ம் ஆண்டு பெரும்பான்மையை பெற்றுத்தந்தது என்றும் கூறினார்.

பாஜகவின் முதல் 5 ஆண்டு ஆட்சியிலும் மோடி நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார். பணமதிப்பிழக்க நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த பிறகு மோடியின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று பலரும் கருத்துகளை கூறினர். ஆனால், மோடிக்கு 303 இடங்களில் வெற்றியை பெற்றுத் தந்தனர் மக்கள். இது 2014ம் ஆண்டு தேர்தலில் 287 ஆகவே இருந்தது. இது மக்கள், பல நாட்களாக அரசியல் அழுத்தத்திற்காக கண்டு கொள்ளப்படாமல் இருந்த விவகாரங்களில் மோடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுவதாகவே இருக்கிறது.

விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்துவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, தோமர், அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் சில விவசாய சங்க தலைவர்களுடன் நடைபெற்று வருகிறது என்று மேற்கோள்காட்டினார். மேலும் அரசு 9ம் தேதி அன்று விவசாயிகளுக்கு அளித்த முன்மொழிவு குறித்த அவர்களின் கருத்திற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும் படிக்க : வேளாண் சட்டங்களை ரத்து செய்ய அரசு தயாராக இல்லை; உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள்

அரசு முன்மொழிவில் அவர்கள் மாற்றங்களை மேற்கொண்டு எங்களுக்கு திருப்பி அனுப்பினால் நாங்கள் உடனே அவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று அவர் கூறினார். அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படமாட்டாது என்பதில் தெளிவாக இருக்கும் தோமர் வரும் நாட்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்று நம்பிக்கையுடன் உள்ளார்.

விவசாயிகளுக்கு ஆர்வம் இல்லாத சட்டத்தின் பகுதிகளை நாங்கள் மறு ஆய்வு செய்ய தயாராக இருக்கின்ரோம். ஆனால் அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சட்டத்தை படிக்க தயாராக இல்லை. அவர்களுடனான பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு சோகைகளை எரித்தல் (stubble-burning), மின்சார மசோதா போன்ற இதர பிரச்சனைகள் குறித்த அக்கறையும் இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். அது குறித்தும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அவர் கூறினார்.

publive-image

இது தொடர்பான மாற்றங்களை எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் கேட்டுக் கொண்ட போது பாராளாமன்றத்தில் ஏன் இது தொடர்பாக விவாதிக்கவோ, தேர்வுக்குழு அல்லது நிலைக்குழுவிற்கு அனுப்பவோ இல்லை என்று கேள்வி எழுப்பிய போது தோமர், “இவை அனைத்தும் மிகச்சிறிய சட்டங்கள். மேலும் பல ஆண்டுகளாக இவை விவாதிக்கப்பட்டு வந்தன. சிக்கலான சட்டங்கள் என்றால் மட்டுமே நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியிலும் கூட அன்றைய பிரதமர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருந்தனர். அப்போது அரசியல் கட்சிகள் மற்றும் மாநிலங்களில் பரந்த ஒருமித்த கருத்து இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

தோமர் பாஜக கிஷான் மோர்ச்சா தேசிய தலைவர் ராஜ்குமார் சஹாரிடம் இந்த போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். மாலையில் உ.பி. பாரதிய கிஷான் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் இந்த விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தருவது குறித்து கூறினர். மேலும் இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்றும் கூறினார்கள். வேளாண் சட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) தொடர்பான பரிந்துரைகளுடன் அவர்கள் வேளாண் அமைச்சருக்கு ஒரு குறிப்பாணை சமர்ப்பித்தனர்.

ஹரியானாவைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் குழு ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத்தை சந்தித்தது. சட்லஜ் யமுனா இணைப்பு கால்வாயை விரைவாக முடிக்கக் கோரி தூதுக்குழு ஒரு குறிப்பை சமர்ப்பித்தது, இதனால் ஹரியானா தனது பங்கை பஞ்சாபிலிருந்து பெற முடியும். அக்குழுவின் ஒரு உறுப்பினராக இருந்த பிவானி-மகேந்திரகரைச் சேர்ந்த பாஜக எம்.பி. தரம்பீர் சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “நாங்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை சமர்ப்பித்தோம், அதில் யமுனா நதியில் அணைகள் விரைவாக கட்டுதல் மற்றும் எஸ்.ஒய்.எலை விரைந்து முடித்தல் ஆகியவையும் இடம் பெற்றிருந்தது.

கடந்த இரண்டு நாட்களில் இது இரண்டாவது முறையாக ஹரியானா பாஜக தலைவர்கள் மத்திய அமைச்சர்களுடன் எஸ்.ஒய்.எல் பிரச்சினையை எழுப்பியுள்ளனர். திங்களன்று, மத்திய வேளாண் அமைச்சருடனான சந்திப்பின் போது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் தூதுக்குழு இதே கோரிக்கையை எழுப்பியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

Farmers Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment