scorecardresearch

பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 மொபைல் செயலிகளுக்கு தடை : காஷ்மீரில் மத்திய அரசு நடவடிக்கை

ஜம்மு காஷ்மீரில் 14 மொபைல் செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் தடுக்கப்பட்டுள்ளன.

Mobile Apps
மொபைல் செயலி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பயன்படுத்தி வந்த 14 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை் விதித்துள்ளதாக என்று மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் (எம்.ஹெச்.ஏ) பரிந்துரையின் பேரில், சம்பந்தப்பட்ட துறை விக்ரம் (Wickrme), மீடியாஃபயர் (Mediafire), பிரையர் (Briar), பிசிசாட் (BChat), நண்ட்பாக்ஸ் (Nandbox), கோனியன் (Conion), ஐஎம்ஓ (IMO), எலிமென்ட் (Element), செகண்ட் லைன் (Second line), ஜாங்கி (Zangi), த்ரீமா (Threema), கிரிப்வைசர் (Crypviser), எனிக்மா (Enigma) மற்றும் சேஃப்ஸ்விஸ் (Safeswiss) ஆகிய செயலிகளை தடை செய்துள்ளதாக ஒரு ஆதாரம் தெரிவித்துள்ளது. . “ஆரம்பத்தில், ஒரு முன்னணி மெசஞ்சர் மொபைல் பயன்பாடு உட்பட 15 மொபைல் பயன்பாடுகள் அடையாளம் காணப்பட்டது. ஆனால் இதில் 14 செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் தடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரியின் கூற்றுப்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆன்-கிரவுண்ட் தொழிலாளர்களுடன் (OGW) தொடர்புகொள்வதற்கு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் இந்த செயலிகளை பயன்படுத்தி வந்ததை கண்டறிந்த பின்னர் இவற்றை தடுக்கும் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தனர். “இந்த செயலிகளை இந்தியாவில் யாரும் பயன்படுத்தவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இந்திய சட்டங்களின்படி கட்டாயப்படுத்தப்பட்ட தகவல்களைத் தேடுவதற்கு தொடர்பு கொள்ள முடியாது” என்றும் தெரிவித்துள்ளது.

“இந்தப் செயலிகளில் பெரும்பாலானவை இந்த பயனர்களுக்கு பெயர் தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவற்றின் அம்சங்கள் இந்த செயலிகளுடன் தொடர்புடைய நிறுவனங்களைத் தீர்ப்பதை கடினமாக்குகின்றன என்றும் புலனாய்வு முகமைகள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்தன. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகமான மற்றும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது துணை நிறுவனங்களுக்கு இந்த மொபைல் செயலிகள் உதவுகின்றன” என்று மற்றொரு ஆதாரம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Tamil 14 mobile mobile apps blocked in jammu and kashmir used by terrorists