scorecardresearch

ஆம் ஆத்மி அரசுக்கு அழுத்தம்… பஞ்சாப்பில் புதிய திட்டத்துடன் களமிறங்கும் பா.ஜ.க

மத்திய அமைச்சர் அமித் ஷா அடுத்த மாதம் போதைப்பொருள் எதிர்ப்பு யாத்திரையை தொடங்கி வைத்த பிறகு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மற்ற திட்டங்களை வெளியிடுவார் என்றும், பிரதமர் மோடி விரைவில் பஞ்சாப் வருவார் என்றும் கூறப்படுகிறது.

ஆம் ஆத்மி அரசுக்கு அழுத்தம்… பஞ்சாப்பில் புதிய திட்டத்துடன் களமிறங்கும் பா.ஜ.க

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் துணை முதல்வர் கைது, பஞ்சாப்பில் பதற்றம் என ஆம் ஆத்மி கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போதை பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக தொடங்கவிருக்கும் நடைபயணத்தின் மூலம் பஞ்சாப்பில் தங்களுக்கு சாதகமாக பல திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

குறுகிய காலத்தில் தேசிய கட்சியாக அங்கீகரம் பெற்ற ஆம் ஆத்மி கட்சி டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சி செய்து வருகிறது. இதில் டெல்லியில் அக்கட்சியின் தேசிய தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப்பில் பகவத் மான் ஆகியோர் முதல்வர் பதவி வகித்து வருகின்றனர். இதனிடையே கடந்த சில மாதங்களாக ஆம் ஆத்மி பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.

இதில் கடந்த வாரம் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லியின் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியாக மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் ஒரு முக்கிய அமைச்சரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் டெல்லியில் அமைச்சரவை மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  

இதேபோல் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பஞ்சாப்பில் ஆம் ஆத்மி குறித்து பல்வேறு குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதால் அங்கேயும் பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான மாநிலம் தழுவிய யாத்திரையைத் தொடங்க இருக்கிறார். இது தவிர பஞ்சாபில் தனக்குச் சாதகமாகத் திகழும் வகையில் பாஜக சீக்கிய தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் பல திட்டங்களைத் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை பாஜகவால் தேர்தல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும், ஆம் ஆத்மி அரசாங்கத்தின் தோல்விகள் மற்றும் மாநிலத்தின் வேரூன்றிய கட்சியின் மீதான குற்றச்சாட்டுகள், அம்ரித்பால் சிங் போன்ற பிரமுகர்களின் தோற்றம் மற்றும் அவர்களின் சொல்லாட்சிகள், உதவியுடன் பாஜக செயல்படுத்தும் கடுமையான தேசியவாதக் உரைகள் ஈர்ப்பை ஏற்படுத்தலாம்.

அமித்ஷா அடுத்த மாதம் யாத்திரையைத் தொடங்கிய பிறகு, மற்ற நிகழ்ச்சிகளைத் தொடங்க பாஜக தலைவர் ஜேபி நட்டா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் விரைவில் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்சி “நல்லாட்சி, தேசியவாதம் மற்றும் தீர்க்கமான தலைமைத்துவம் பற்றிய செய்தியை வழங்க இது சரியான நேரம்” என்று ஒரு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்த வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான திட்டத்தின் ஒரு பகுதியாக பா.ஜ.க ஆக்ரோஷமான போக்கில் களமிறங்க உள்ளதாக மற்றொரு தலைவர் கூறுகிறார். பஞ்சாப்பில், 2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக விவசாயச் சட்டங்கள் தொடர்பாக பாஜகவுடனான உறவை அகாலிதளம் முறித்துக் கொண்டுள்ள நிலையில், மாநிலத்தில் முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

2019 இல், அகாலிகளுக்கு எதிரான கோபம் அதிகமாக இருந்ததால், பாஜக 9.63% வாக்குகளுடன் குர்தாஸ்பூர் மற்றும் ஹோஷியார்பூர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பின்னர் பாஜகவுடன் இணைந்தது) போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 2022 சட்டமன்றத் தேர்தலை சந்தித்தாலும், இந்த கூட்டணி பாஜகவுக்கு அதிக பலனைத் தரவில்லை. 2017 இல், பாஜக அகாலிகளுடன் கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வென்றது; 2022ல் தனித்து 73 இடங்களில் போட்டியிட்டு இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது.

இருப்பினும், பல ஆண்டுகளாக மோசமான செயல்திறன் இருந்தபோதிலும், பாஜக மாநிலத்தின் மீது கவனம் செலுத்துகிறது – 2022 சட்டமன்றத் தேர்தலின் போது, எல்லை மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதால் ஏற்படும் “ஆபத்துகள்” குறித்து பாஜக பலமுறை பயத்தை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், பயங்கரவாத அமைப்புடன் சமரசம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியிருந்தார்.

மேலும் இந்தியாவின் 600 கி.மீட்டர் எல்லை, தேசிய பாதுகாப்பு போன்ற விஷயங்களை நாங்கள் பார்க்கிறோம். பாஜக எம்பி பர்வேஷ் வர்மா அப்போது கெஜ்ரிவாலை “பயங்கரவாதி” என்று கூறினார். ஆம் ஆத்மி கட்சி தொடர்பான அவர்களின் கவலைகள் “இப்போதே நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று ஒரு பாஜக எம்பி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை அக்கட்சி எவ்வாறு கையாளும் என்று நாங்கள் எப்போதும் அஞ்சுகிறோம். இந்த பேச்சு தற்போது பஞ்சாபில் என்ன குழப்பத்தை உருவாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மாநிலத்தில் பாஜக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பேசிய பாஜக எம்.பி “பொறுப்பான தேசியக் கட்சியாக இருப்பதால், விஷயங்கள் மேலும் சிக்கலாகிவிடாமல் பார்த்துக் கொள்வது எங்கள் கடமை.” மத்திய உள்துறை அமைச்சராக, போதைப்பொருள் பிரச்சனையை கையாளும் போதைப்பொருள் ஏஜென்சிகள் மற்றும் அவருக்கு கீழ் உள்ள வெளிப்புற மற்றும் உள் அச்சுறுத்தல்களை பாதுகாப்பு ஏஜென்சிகள் கவனித்து வருகிறது.

பஞ்சாப் மக்கள் போதைப்பொருள் அச்சுறுத்தலால் ஏற்கனவே கவலையடைந்துள்ளனர், குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததைக் கண்டறிந்த பிறகு. சமீபத்திய முன்னேற்றங்கள் அவர்களின் மனதில் மேலும் குழப்பத்தை உருவாக்கியுள்ளன,” என்று பஞ்சாபில் செயல்படும் கட்சியை நன்கு அறிந்த ஒரு கட்சித் தலைவர் கூறினார்,

அம்ரித்பால் சிங்கின் எழுச்சி தொடர்பான அதன் எச்சரிக்கைகள் பிந்தையவர்களால் “வேண்டுமென்றே” புறக்கணிக்கப்பட்டதாகக் கூறியுள்ள, ஆம் ஆத்மி இது பாஜகவின் அரசியல் வடிவமைப்பு இருப்பதாக பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் குற்றம் சாட்டினார். ஆனால், இதை பாஜக தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.

அம்ரித்பால் வெளியிட்ட சில ஆவேச அறிக்கைகளை மத்திய அரசு கவனத்தில் எடுத்ததா என்று கேட்டதற்கு, “இது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினை, அதை மாநிலம் கையாளட்டும். மத்திய அரசும் கண்காணிக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என நவம்பர் மாதம் மத்திய அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Tamil aap govt under pressure bjp lays out a punjab plan