பிரதமர் அலுவலகத்தை போலியாக அணுகி, தனிப்பட்ட லாபத்திற்காக பிரதமரின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய் ‘ஷெர்பூரியா’ நிறுவனத்தின் ஆலோசனை குழுவில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் குழுவில் உள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த மார்ச் மாதம் ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்ட கிரண் படேலுடன் தொடர்புடையவர், மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி 2018 சிபிஐ போரில் சிக்கினார். உண்மையில், இந்த ஐபிஎஸ் அதிகாரியின் மகன் ஒரு ஒய்ஆர்இஎஃப் (YREF) இயக்குனருடன் மற்றொரு நிறுவனத்தை நடத்துகிறார். இந்த நிறுவனம், தற்செயலாக, உபி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சஞ்சய் ராயின் அதே அதே முகவரியில் உள்ளது.
இது தொடர்பா கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் பதிவுகளின்படி, ஒய்ஆர்இஎஃப் (YREF) அக்டோபர் 30, 2019 அன்று இணைக்கப்பட்டது, அதன் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் வாரணாசியில் இருக்கும்போது, அது காஜிபூரில் இருந்து செயல்படுகிறது. ஒய்ஆர்இஎஃப் (YREF) அதன் பங்குதாரர்கள் பற்றிய விபரங்களை வெளியிடவில்லை, மேலும் நிறுவனங்களின் பதிவாளரிடம் தாக்கல் செய்ததில் நிறுவனம் “உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்டதாக” இருப்பதால் பங்குதாரர்கள் பற்றிய விபரம் தேவையில்லை என்று கூறியது.
அதேபோல் சஞ்சய் ராய் ஒய்ஆர்இஎஃப் (YREF) இல் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை என்றாலும், பல்வேறு சமூக ஊடகங்களில் அவரது பக்கத்தில் பல்வேறு முக்கிய அமைச்சர்களுடன் அவரது படங்கள் பதிவிடப்பட்டுள்ளது. மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை அவர் முன்னெடுப்பதைக் காட்டுகிறது. இதன் மூலம் சஞ்சய் ராய் ஒய்ஆர்இஎஃப் (YREF) ஐ நடத்துவதாகவும், “அவர் அதிகாரத்தில் இருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறி பலரை ஏமாற்றி, பிரதமர் மற்றும் பிற கேபினட் அமைச்சர்களுடன் தனது படங்களைக் காட்டி, அவர்களின் நற்பெயருக்குக் கேடு விளைவித்துள்ளார்” என்றும் உ.பி காவல்துறை எஃப்ஐஆரில் கூறியுள்ளது.
ஒய்ஆர்இஎஃப் (YREF) அதன் ஆலோசனைக் குழுவில் 6 நபர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஆறு கூடுதல் இயக்குநர்களைக் கொண்டுள்ளது. அதன் கூடுதல் இயக்குநர்களில் ஒருவரான பிரதீப் குமார் ராய், டெல்லி என.சி.ஆர் (NCR) நிறுவனமான நிவேஷன் வென்ச்சர்ஸில் “நியமிக்கப்பட்ட பங்குதாரராக” உள்ளார். இந்த நிறுவனத்தின் மற்ற பங்குதாரர் குஷாக்ரா சர்மா, ஓய்வுபெற்ற குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.சர்மாவின் மகன். நவம்பர் 16, 2017 அன்று, நிவேஷன் வென்ச்சர்ஸ், டெல்லி ரைடிங் கிளப்பில் எண். 1, சப்தர்ஜங் சாலையில், புதுதில்லியில் பதிவு செய்யப்பட்டதாக ஆர்ஓசி (RoC) பதிவுகள் காட்டுகின்றன. இதில் உ.பி காவல்துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சஞ்சய் ராயின் முகவரி தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிவேஷன் வென்ச்சர்ஸ் பின்னர் அதன் பதிவு செய்யப்பட்ட முகவரியை S 31, S 32A, முதல் தளம், ஹர்கோபிந்த் என்கிளேவ், DLF கேட் எதிரில், புது தில்லி என மாற்றியது. 2018-ல் அப்போதைய இயக்குநர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே சிபிஐக்குள் போர் உச்சத்தில் இருந்தபோது, பிரதீப் குமார் ராய் அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் “விரும்பத்தகாத தொடர்பு மனிதர்களின் பட்டியலில்” இருப்பதாகக் குற்றம் சாட்டி அப்போதைய கேபினட் செயலாளருக்கு அஸ்தானா கடிதம் எழுதினார்.
ஏ.கே.சர்மா அப்போது சிபிஐயில் இணை இயக்குநராக இருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிரதீப் ராயின் வழக்கறிஞர் மறுத்தார். ஷர்மா இப்போது ஒய்ஆர்இஎஃப் (YREF) இன் ஆலோசனைக் குழுவில் உள்ளார். அவர் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை, என்றாலும், அவர் பயணம் செய்வதாக செய்தி மூலம் தெரிவித்தார். ஆனால் அடுத்தடுத்த அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
மேலும், ஒய்ஆர்இஎஃப் (YREF) இன் ஆலோசனைக் குழுவில் குஜராத் கேடரைச் சேர்ந்த 1978 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி (ஓய்வு பெற்றவர்) எஸ்கே நந்தா உள்ளார். மார்ச் மாதம் ஜம்மு காஷ்மீரில் பிஎம்ஓ அதிகாரி போல் வேஷம் போட்டதற்காக கைது செய்யப்பட்ட கன்மேன் கிரண் படேலுக்கு குஜராத்தில் ஜி20 தொடர்பான மாநாட்டை ஏற்பாடு செய்ய நந்தா உதவி செய்துள்ளார். ஆலோசனைக் குழுவில் உள்ள மற்றவர்கள், வைஸ் அட்மிரல் சுனில் ஆனந்த், ஏவிஎஸ்எம், என்எம் (ஓய்வு), ஏர் கமன்டர் மிரிகிந்திர சிங், விஎஸ்எம் (ஓய்வு), 1982 ஆம் ஆண்டின் மற்றொரு உத்தரப் பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரி இடம்பெற்றுள்ளனர்.
கிராமப்புற இளைஞர்களின் தொழில் முனைவோர் திறனைப் பயன்படுத்துவதன் மூலமும், விவசாய நடைமுறைகளை நவீனமயமாக்குவதன் மூலமும் வேலைகளை உருவாக்கும் நோக்கில் வேலை செய்வதாக ஒய்ஆர்இஎஃப் (YREF)கூறுகிறது.
இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது, நந்தா ராயை “இரண்டு முறை அவர் கட்ச்சில் இருந்து உற்பத்தியாளராக இருந்துள்ளார் என்றும், வைப்ரன்ட் குஜராத்தின் போது சந்தித்ததாக கூறினார். வைப்ரன்ட் குஜராத் என்பது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அரசு நடத்தும் முதலீட்டு மாநாடு. அவர் என்னை எப்படி ஆலோசனைக் குழுவில் சேர்த்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் எந்த கூட்டத்திலும் பங்கேற்றதில்லை. இளைஞர்களுக்கான எனது செயல்பாடுகளால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம்,” என்று நந்தா கூறினார்.
இது குறித்து ஏர் கமடோர் மிரிகிந்திர சிங்கைத் தொடர்பு கொண்டபோது, “நான் சேவையில் இருந்தபோது அவரை எனக்குத் தெரியும். கடந்த நான்கு ஆண்டுகளாக நான் அவரைச் சந்திக்கவில்லை, ஆனால் நாங்கள் தொடர்பில் இருந்தோம். அவர் ஒரு நல்ல மனிதர். அவர் அதிகார வட்டங்களில் நன்றாக இணைக்கப்பட்டார். ஆலோசனைக் குழுவிற்கு அவர் அந்த நேரத்தில் என் சம்மதத்தை எடுத்திருக்கலாம், எனக்கு நினைவில் இல்லை. ஆனால், என்.ஜி.ஓ.வுடன் எனக்கு தீவிர தொடர்பு இல்லை,” என கூறியுள்ளார்.
வைஸ் அட்மிரல் சுனில் ஆனந்தும் ஒய்ஆர்இஎஃப் (YREF) உடனான தொடர்பை மறுத்துள்ளார். “எனக்கு சஞ்சய் ராயை தெரியும், அவரை சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர் என்னை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆலோசனைக் குழுவில் ஒரு அங்கமாக்கச் சொன்னதாக எனக்கு நினைவில்லை. இந்த அரசு சாரா அமைப்புக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பாய்வு செய்த ஆவணங்கள், 2022-23 ஆம் ஆண்டில் ஒய்ஆர்இஎஃப் (YREF) நன்கொடையாக ரூ.7.84 கோடியைப் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. நன்கொடையாளர்களில் டால்மியா குடும்ப அலுவலக அறக்கட்டளை மற்றும் ஒரு பொதுத்துறை வங்கி உட்பட பல டெல்லி என.சி.ஆர் (NCR) நிறுவனங்கள் அடங்கும். ஷிப்ரா குரூப் நிறுவனமான ஷிப்ரா எஸ்டேட் லிமிடெட் ரூ.1 கோடி நன்கொடை அளித்தது; குருகிராமில் உள்ள என.ஐ.ஏ (NIA) சாப்ட்வேர் இந்தியா லிமிடெட் அக்டோபர் 2022 இல் ஒய்ஆர்இஎஃப் (YREF) க்கு நன்கொடையாக ரூ.20 லட்சம் செலுத்தியது; டெல்லி என்.சி.ஆர் (NCR)-ஐ தளமாகக் கொண்ட செப்ரோஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த ஆண்டு ஜனவரியில் இரண்டு தவணைகளாக ரூ.50 செலுத்தியது.
மார்ச் 2021 இல் முடிவடைந்த ஆண்டில், இந்நிறுவனம் ரூ. 1.34 கோடி வருவாய் ஈட்டியுள்ளது, அதில் ரூ. 1.3 கோடி நன்கொடைகள் மூலம் வந்தது. RoC-யிடம் தாக்கல் செய்த தகவலின்படி, சமூக மற்றும் தொண்டு செலவுகளுக்காக ரூ.87.8 லட்சம் செலவிட்டுள்ளது. மார்ச் 2020 முடிவடைந்த நிதியாண்டில், ஒய்ஆர்இஎஃப் (YREF) மொத்த வருவாயாக ரூ. 92.5 லட்சத்தை அறிவித்தது, அதில் முழுத் தொகையும் நன்கொடைகள் மூலம் வந்தது. 35.25 லட்சத்தை அறக்கட்டளைக்கு செலவிட்டதாக RoC-யிடம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான பெயர் வெளியிட விரும்பாத இந்த அனைத்து நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், ஒய்எஸ்.இஎஃப் (YREF) க்கு நன்கொடை அளிப்பதை உறுதிப்படுத்தினர், ஆனால் இது அவர்களின் சிஎஸ்ஆர் (CSR) உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது என்று கூறினார். இருப்பினும், இந்தியன் எக்ஸ்பிரஸ் அனுப்பிய அஞ்சல்களுக்கு அவர்கள் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தில் உள்ள அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட அஞ்சல்களுக்கும் ஒய்எஸ்.இஎஃப் (YREF) பதிலளிக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“