Advertisment

ஒரு நபரின் கைது… மக்கள் மீது ஒடுக்குமுறை... ஒரு வருடமாக கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர் தீ

மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறை மோதலின் தொடக்கம் பழங்குடியின மாவட்டமான சுராசந்த்பூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது தொடங்கியது

author-image
WebDesk
New Update
Manipur

மணிப்பூரின் சுக்னுவில் இன மோதல்கள் மற்றும் கலவரங்களைத் தொடர்ந்து வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாக மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பரபரப்பின் உச்சக்கட்டமாக இருந்து வரும் நிலையில்,  பள்ளத்தாக்கில் உள்ள மெய்டீஸ் மற்றும் குகி-ஜோமிஸ் மலைவாழ் பழங்குடியினர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதத்தின் போது அமளி நீடித்ததால் கடந்த நான்கு நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், "சில நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சில சம்பவங்கள்" மணிப்பூர் வன்முறைக்கு காரணமாக உள்ளது. இரு சமூகத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக பதற்றம் இருந்து வருகிறது, ஆனால், கடந்த ஒரு வருடமாக, களத்தில், சில சம்பவங்கள் மற்றும் என் பிரேன் சிங் தலைமையிலான அரசாங்கத்தின் பதில் ஆகியவை தவறுகளை முன்னுக்கு கொண்டு வந்துள்ளன.

எனவே ஏப்ரல் 14 ஆம் தேதி, மணிப்பூர் உயர்நீதிமன்றம், மெய்டீஸுக்கு எஸ்டி அந்தஸ்து வழங்குவதற்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்புமாறு மாநில அரசைக் கேட்டபோது, மோதல் வெடிக்க தொடங்கியது. ஆனால் தற்போதைய மோதலின் மையமாக இருக்கும் பழங்குடியின மாவட்டமான சுராசந்த்பூரைச் சேர்ந்த ஒரு மனித உரிமை ஆர்வலர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட கைது செய்யப்பட்டபோதே இந்த மோதல் தொடங்கியது.

மார்க் டி ஹாக்கிப், 2022 மே 24 அன்று மணிப்பூர் காவல்துறையினரால் டெல்லியில் உள்ள அவரது வீட்டிலிருந்து IPC மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வகுப்புவாத நல்லிணக்கத்தை ஊக்குவித்ததாகக் கூறப்படும் சமூக வலைதள பதிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டில், இது தொடர்பாக அவருக்கு எதிராக மூன்று எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் மைடீஸ்களால் புனிதமாகக் கருதப்படும் மவுண்ட் கவுப்ரு மற்றும் மவுண்ட் தாங்ஜிங் ஆகிய இரண்டு மலைகளின் மீது குக்கி இன மக்களுக்கான உரிமையை அவர் உறுதிப்படுத்திய பின்னர் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது சம்பவம் காரணமாக சூராசந்த்பூரில் பெரும் போராட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து , முதலமைச்சர் என் பிரேன் சிங் ஹாக்கிப்பை "மியானாமரைஸ்" என்று அழைத்தது கடும் எதிர்ப்புக்கு வழிவகுத்த நிலையில், அவரது குடும்பத்தினர் இதனை மறுத்துள்ளனர். மேலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே மாநிலத்தில் அவர்களின் பூர்வகுடிகள் பதிவுகளில் உள்ளன என்று கூறியதை தொடர்ந்து கடந்த மே 28 அன்று ஹாக்கிப்புக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தாங்ஜிங் மலைகளுக்குச் சென்ற மெய்டீஸ் குழுவினரை சில உள்ளூர் குக்கி இன மக்கள் மலை உச்சிக்குச் செல்லவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் பதற்றம் அதிகரித்த நிலையில், மெய்தீஸ்களுக்கு ஆதரவாக “பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (பிஜேஒய்எம்) தொழிலாளர்கள் களமிறங்கி அங்கு சில மரக்கன்றுகளையும் நட்டனர். தங்ஜிங் மலைகள் பல நூற்றாண்டுகளாக அங்கு சென்று வரும் மெய்தியர்களுக்கு புனிதமானவை. அவர்களை யாரும் தங்களுடையவர்கள் என்று கூற முடியாது” என்று முதல்வர் பிரேன் சிங்குக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறினார்.

publive-image

அதே நேரத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2022 முதல், பிரேன் சிங் அரசாங்கம், சுராசந்த்பூர் மற்றும் நோனி ஆகிய மலை மாவட்டங்களில் உள்ள 38 கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் வந்ததால் அவை சட்டவிரோதமானது என்று கூறி நோட்டீஸ்களை வெளியிட்டது. இது சரியான தகவல் இல்லாமல் அறிவிக்கப்பட்டதாகக் குக்கிகள் கூறி வந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் மலையகத்தில் கசகசா சாகுபடியை அழிப்பதற்கான அரசாங்க உந்துதலுடன், அரசாங்கம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம்பித்தபோது வன்முறை பெரிதானது.

மணிப்பூரில் 2-வது முறையாக பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ள முதல்வர் பிரேன் சிங், ஏராளமான சிக்கலை எதிர்கொள்ளத் தொடங்கினார். 60 இடங்கள் கொண்ட சட்டசபையில் 54 என்.டி.ஏ எம்.எல்.ஏக்கள் இருப்பதால், லட்சியங்களுக்கு இடமளிப்பது எளிதல்ல. பிரேன் சிங் தலைமைத்துவ பாணியுடன் சிலர் முரன்பட்ட கருத்துக்களுடன் இருந்ததால், இது கட்சிக்குள் அமைதியான கிளர்ச்சிக்கு வழிவகுத்தது.

இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திற்குள், மாநில அரசில் இருந்து நான்கு பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். மேலும் பிரேன் சிங் மீதான அதிருப்தியை மத்திய தலைமையிடம் தெரிவிக்க பலர் டெல்லியில் முகாமிட்டனர். இந்த தகவல் ஊடகங்களில் பரவியதால், கடந்த ஏப்ரல் மாதம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர் பிரேன் சிங் தனக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று அறிவித்திருந்தார். ஆனால் அடுத்த நாளே மற்றொரு எம்எல்ஏ ராஜினாமா செய்தார்.

publive-image

கசகசா மீது கடும் நடவடிக்கை, ‘சட்டவிரோதமாக கிராமங்கள்’

இந்த பிரச்சனைகள் தொடங்குவதற்கு முன்பு, மைதி லீபுன் மற்றும் ஆரம்பை தெங்கோல் ஆகிய இரண்டு கடுமையான மைதீ அமைப்புகளின் எழுச்சியை அரசு கண்டறிந்தது. கடந்த 2020 இல் ஒரு கலாச்சார அமைப்பாகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்புகள், தற்போதைய மோதலில் குக்கிகள் மீதான தாக்குதலில் முன்னணியில் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

முதல்வரின் கட்சி மற்றும் சமூகம் குழப்பத்தில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு, மலை மாவட்டங்களில் கசகசா சாகுபடிக்கு எதிராக முதல்வர் பிரேன் சிங் ஒரு நடவடிக்கையைத் தொடங்கிய நிலையில், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 'சட்டவிரோத கிராமங்களை' ஒடுக்குவதற்கு உத்தரவிட்டிருந்தார். இது குறித்து அரசாங்கம் தரப்பில் கூறுகையில், மியான்மரில் இருந்து குகி-சின் பழங்குடியினர் அடக்குமுறை ஜுண்டாவிலிருந்து வெளியேறியதால் இந்த நடவடிக்கைகள் தேவைப்பட்டன என்று கூறியிருந்தனர்.

இது குறித்து லெட்பாவ் ஹொக்கிப்பின் கீழ் முதல்வர் பிரேன் சிங் அமைத்த குழு, டன்ங்நோபல் (Tengnoupal) இன் பழங்குடி பாஜக எம்.எல்.ஏ., 2,000 க்கும் மேற்பட்ட "சட்டவிரோதமாக குடியேறியவர்கள்" மலைகளில் உள்ளதாக முதல் கட்ட ஆய்வில் கண்டறிந்துள்ளது. புதிய கிராமங்களை உருவாக்குவதன் மூலம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை மலையகத்தில் உள்ள கிராமத் தலைவர்கள் குடியேற்றுவதாகவும் அரசாங்கம் குற்றம் சாட்டியது.

கசகசா சாகுபடி மற்றும் கிராமங்களின் குடியேற்றம் ஆகிய இரண்டும் பாரிய காடுகளை அழிப்பதற்கான நடவடிக்கை என்று அரசாங்கம் கூறியது. இந்த இரண்டு பிரச்சனைகள் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்புகள் குக்கி மக்களால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. அவர்கள் இயற்கை வளங்களை கைப்பற்றுவதற்காக சட்டப்பூர்வமான குக்கி மக்களை அவர்களது நிலத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு இந்த நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கத்தை குறித்து தங்களது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

மேலும் மணிப்பூரில் உள்ள முழு போதைப்பொருள் கடத்தலிலும் கசகசா பயிரிடுபவர்கள் மிகச் சிறிய அளவில் இருப்பதால், குக்கிகள் குறிவைக்கப்பட்டதாக கருதுகின்றனர். கார்டெல் உரிமையாளர்கள்தான் இம்பாலில் அமர்ந்திருக்கிறார்கள், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று ஒரு மூத்த பாதுகாப்பு நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.

இதனிடையே கடந்த ஜூலை 2020 இல் மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், அப்போதைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஜூன் 2018 இல் நடந்த போதைப்பொருள் பறிமுதல் சோதனையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராக. போதைப்பொருள் மற்றும் எல்லைப் பணியகத்தின், தூணோஜாம் பிருந்தா, சி.எம். பிரேன் சிங் மற்றும் மாநில பாஜக தலைவர் ஒருவர் வழக்கை கைவிடுமாறு தங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டினார்.

publive-image

இந்த ஆண்டு மார்ச் மாதம் காங்போக்பி மாவட்டத்தில் நடந்த ஒரு வெளியேற்ற இயக்கத்தின் போது வன்முறை வெடித்ததால், குக்கி தீவிரவாத அமைப்புகளுடனான முத்தரப்பு சஸ்பென்ஷன் ஆஃப் ஆபரேஷன் (SoO) ஒப்பந்தத்தில் இருந்து மாநிலம் விலகுவதாக முதல்வர் சிங் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதி மெய்டீஸுக்கு எஸ்டி அந்தஸ்து வழங்குவதற்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்புமாறு மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வந்தது. மணிப்பூரில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் மீதேய்/மெய்தி சமூகத்தை சேர்க்க மனுதாரர்கள் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் நீண்ட ஆண்டுகளாக போராடி வருகின்றன" என்று குறிப்பிட்ட நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி பெஞ்ச், மனுதாரர்களின் வழக்கை பரிசீலித்து அதன் பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

வன்முறைச் சுழல்

மே 3 வன்முறைக்கு ஏப்ரல் 27 அன்று, ஒரு கும்பல் சுராசந்த்பூரில் உள்ள திறந்த உடற்பயிற்சி கூடத்திற்கு தீ வைத்தது, அதை அடுத்த நாள் முதல்வர் திறந்து வைத்தார். அடுத்த நாள், ஒரு கும்பல் வெளியேற்றும் இயக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் உள்ள வன அலுவலகத்தை எரித்தது. இது குறித்து மாநில அரசு தயாரித்த அறிக்கையின்படி, மெய்தேய்க்கு எஸ்டி அந்தஸ்து குறித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அனைத்து மலை மாவட்டங்களிலும் பழங்குடியினக் குழுக்களால் பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  தீவிர மைதேய் சிவில் சமூக அமைப்பான மெய்தே லீபுன் பள்ளத்தாக்கில், பிரேன் சிங்குக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. பள்ளத்தாக்கைச் சேர்ந்த குக்கி மக்கள் எதிர்ப்பு அணிவகுப்பில் சேருவதைத் தடுப்பதற்கான ஒரு தந்திரமான செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது. மே 3 அன்று எதிர்ப்பு அணிவகுப்பு தொடங்கியபோது, ​​மெய்டீஸ் மற்றும் குகிஸ் இடையே சில மோதல் சம்பவங்கள் மலைகளின் சில பகுதிகளில் பதிவாகியுள்ளன, இந்த மோதலின் போது சில வன அலுவலகங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

publive-image

அன்று பிற்பகல் 2.15 மணியளவில் சுராசந்த்பூருக்கு சில கிலோமீட்டர்கள் முன்னால் டோர்பங் அருகே உள்ள குக்கி போர் நினைவு வாயிலின் பிளேக்கில் டயர் எரிவதைக் கண்ட பிறகு வன்முறை மேலும் அதிகரிக்க தொடங்கியது. அதே நேரத்தில், டோர்பங்கிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்வாய் கிராமத்தில் இரண்டு உடல்களை போலீசார் மீட்டனர். இதைத் தொடர்ந்து, இம்பால்-சுராசந்த்பூர் நெடுஞ்சாலையின் டோர்பங்-கங்வாய் பகுதியில் பெரும் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது.

பிற்பகல் 3 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை, டோர்பங் மற்றும் காங்வாய் ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மதியம் 3.30 மணியளவில், பிஷ்னுபூரின் பெரும்பாலும் மெய்டே மாவட்டத்தில் சில தேவாலயங்கள் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாலை 5.30 மணியளவில், பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் இடையே உள்ள பகுதிகளில் மெய்டேய் மற்றும் குகி மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

மாலை 5.30 மணியளவில் ஒரு கும்பல் சுராசந்த்பூரில் உள்ள சிங்கத் காவல் நிலையத்தில் ஆயுதங்களை கொள்ளையடித்தது. வன்முறை அதிகரித்ததால், பின்னர் இம்பால் பள்ளத்தாக்கில் பல காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் படைகளின் ஆயுதக் களஞ்சியங்களில் இருந்து ஆயுதங்கள் சூறையாடப்பட்டன - மே மாதத்திலேயே 4,000 ஆயுதங்கள் சூறையாடப்பட்டன. இரவு 7 மணியளவில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் வீடுகளுக்கு தீ வைத்து எரித்துக் கொண்டனர்.

publive-image

இந்த காலகட்டத்தில், பள்ளத்தாக்கில் குகிஸ் மீது மெய்தேயின் கோபத்தை தூண்டியது. இந்த வன்முறை சம்பவத்தில், ஒரு மெய்டே பெண் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், மற்றொருவர் மண்வெட்டியால் கொல்லப்பட்டதாகவும், அவரது கண்கள் பிடுங்கப்பட்டதாகவும் ஒரு வதந்தி பரவியது. மெய்தே குழுக்கள் விரைவில் இம்பால் பள்ளத்தாக்கில் வெறித்தமான வன்முறைக்கு வழி செய்தது. அரசாங்க ஆதாரங்களின்படி, வன்முறையின் முதல் மூன்று நாட்களில் 72 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம் மெய்த்தே பெண்களின் கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொலை பற்றிய வதந்திகள் பொய்யானவை என்று பின்னர் கண்டறியப்பட்டதாக மாநில நிர்வாகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன. இணையதள சேவை முடக்கம் இருந்தபோதிலும், அழைப்புகள் மற்றும் வாய் வார்த்தைகள் மூலம் வதந்திகள் பரவி வருகின்றன, மேலும் இரு தரப்பும் மற்ற தரப்பினரால் செய்யப்படும் அட்டூழியங்களுக்கு எதிர்வினையாற்றுவதாக கூறியதை தொடர்ந்து, மாநிலம் வன்முறைச் சுழலில் தள்ளப்பட்டது, தற்போதுவரை இந்த வன்முறை தொடர்ந்து வருகிறது ஒரு மாநில அரசு அதிகாரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Manipur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment