Advertisment

50-க்கும் அதிகமான கல்லூரிகள், பள்ளிகள், ஹோட்டல் : பிரிஜ் பூஷன் சரண் சிங் சொத்து மதிப்பு விபரம்

தேசிய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் , சிங்கிற்கு சொந்தமாக அல்லது அவருக்கு தொடர்புடைய 54 கல்வி நிறுவனங்கள் கோண்டா, பல்ராம்பூர், பஹ்ரைச் மற்றும் ஷ்ரவஸ்தி ஆகிய நான்கு மாவட்டங்கள் வழியாக செல்லும் அயோத்தி-கோண்டா நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ளன.

author-image
WebDesk
Jun 11, 2023 11:18 IST
Brij Bhushan

பிரிஜ் பூஷன் சரண் சிங்

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புத் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங், அவருக்கு எதிராக இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எழுப்பி ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது பிரிஜ் பூஷன் ஷரன் சிங்ற்கு உள்ள சொந்தமாக 54 கல்வி நிறுவனங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அயோத்தி மாவட்டத்திற்கு அடுத்து, சரயு ஆற்றின் குறுக்கே, பலருக்கும் அறிமுகமான ஒரு முகம் என்றால் அது பிரிஜ் பூஷன் ஷரன் சிங் தான். இந்த பகுதியின் நெடுஞ்சாலையில் உள்ள ஹோர்டிங்குகள், மகாபஞ்சாயத்து அறிவிக்கும் பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் சாலையின் இருபுறமும் உள்ள கல்லூரிகளின் உரிமையாளர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங்.

கோண்டா மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்ச், பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கின் மறுக்கமுடியாத பகுதி என்று சொல்லலாம்.  கல்வி நிறுவனங்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை இலக்காகக் கொண்ட பல திட்டங்களின் மூலம் அவர் ஆதிக்கம் செலுத்தும் அவர் தனது ஆதிக்கத்தை வலுவாக செலுத்தும் பகுதி இது. இங்கு வசிப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை பெற்றுள்ளவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங்.

அதே சமயம் கடந்த மாதம் அனைத்து தொலைக்காட்சி மற்றும் சமூகவலைதளங்களில் அதிக ஆதிக்கம் செலுத்திய பிரிஜ் பூஷன் ஷரன் சிங் குறித்து இப்போது அதிகம் பேச தொடங்கியிருக்கின்றனர்.  சுமார் 80,000 மாணவர்கள் மற்றும் 3,500 ஆசிரியர்களுடன், பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கிற்கு சொந்தமான அல்லது அவருக்கு தொடர்புடைய 54 கல்வி நிறுவனங்கள் கோண்டா, பல்ராம்பூர், பஹ்ரைச் மற்றும் ஷ்ரவஸ்தி ஆகிய நான்கு மாவட்டங்கள் வழியாக செல்லும் அயோத்தி-கோண்டா நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ளன.

publive-image

ஆனால் கோண்டா நகரத்திலிருந்து சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள நவாப்கஞ்ச் பகுதிதான் பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கின் தலைமையகம் என்று சொல்லப்படுகிறது. கல்லூரிகள் தவிர, ஒரு ஹோட்டல், ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சி மைய்யம் மற்றும் தேசிய மல்யுத்த அகாடமி ஆகியவற்றை தன்வசம் வைத்துள்ளார். குறைவான வேலை வாய்ப்புகள் உள்ள பிராந்தியத்தில், இளைஞர்களுக்கான வருடாந்திர 'டேலண்ட் ஹன்ட்', கிசான் சம்மான்கள் "முற்போக்கு விவசாயிகளுக்கு" இலவச கன்றுகள் என அவ்வப்போது பிரிஜ் பூஷன் ஷரன் சிங் சார்பில் பரிசாக வழங்கப்படுகின்றன. மேலும் சிங் ஏற்பாடு செய்யும் கேல் மேளாக்கள் அவர் வழங்கும் ரொக்க விருதுகள் அங்கு வசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

publive-image

1995 இல் செயல்படத் தொடங்கிய நந்தினி நகர் கல்லூரி

மாவட்ட அளவிலான 'டேலண்ட் ஹன்ட்' கோண்டாவின் கல்லூரி மற்றும் பள்ளி ஆண்டுகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும், ஓஎம்ஆர் (OMR) தேர்வுத் தாள்கள் மாவட்டம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் விநியோகிக்கப்படுகின்றன. இந்த தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு வழக்கமாக ஒரு மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டி பரிசாக வழங்கப்படும்.  இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பரிசு பெறுபவர்களுக்கு ரூ.22,000 முதல் ரூ.2,000 வரையிலான ரொக்கப் பரிசுகள் கிடைக்கும்.

“கடந்த இரண்டு தசாப்தங்களாக பிரிஜ் பூஷன் ஷரன் சிங் ஆதிக்கத்தின் எழுச்சியை கண்டு வருகிறோம். இந்த ஆதிக்கத்தின் தொடக்கம் அனைத்தும் 1990 இல் தொடங்கியது. நவாப்கஞ்சில் நந்தினி நகர் கல்லூரி நிறுவப்பட்டாலும் இந்த கல்லூரி 1995-ம் ஆண்டு முதல் தான் செயல்படத் தொடங்கியது, ”என்று அம்மாவட்டத்தின் மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறினார். அந்த கல்லூரி செயல்பட தொடங்கியதும் சிங் விரைவில் பள்ளிகள், கல்லூரிகள், கோண்டா ஹோட்டல் மற்றும் மருத்துவமனைகளின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளார்.

publive-image

கோண்டா மாவட்டத்தில் உள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் இல்லம்

இது குறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், இளைஞர்கள் மத்தியில் சிங்கிற்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. அவர் அயோத்தியின் சாகேத் டிகிரி கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக இருந்தார். 1980 மற்றும் 90 களில் கோயில் இயக்கத்தின் தலைவர்களுடன் தன்னை நெருக்கமாக்கிக்கொண்ட சிங் இன்று, தான் நடத்தும் நிறுவனங்கள் இளைஞர்கள் மற்றும் அவருடன் பணிபுரியும் மக்கள் மீது அவருக்கு முழுமையான நம்பிக்கையை பெற்றுள்ளார். ஏனெனில் இங்குள்ள பொருளாதாரம் நடைமுறைகள் அவரது வணிகத்தை சுற்றியே இயங்குகிறது என்பதே இதற்கு முக்கிய காரணம் என்று அவர் கூறினார். மேலும் அவரது மனைவி கேத்கி தேவி சிங் எம்.பி.யாக இருந்தபோதும், பதவியேற்பு விழாக்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் சிங் எப்படி பங்கேற்பார் என்பதை உள்ளூர் தலைவர்கள் பேசுகின்றனர்.

publive-image

நந்தினி நகர் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதி

1991 ஆம் ஆண்டு முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் இன்று வரை அல்லது அவரது மனைவி உத்தரபிரதேசத்தில் நிரந்தர எம்.பி.யாக இருந்து வருகிறார். 1996 ஆம் ஆண்டில், தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தடா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிங்குக்கு சீட் மறுக்கப்பட்டபோது, அவரது மனைவி கெக்திதேவி சிங் கோண்டா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

publive-image

அதிநவீன 'நேஷனல் மல்யுத்த அகாடமியின்' உள்ளே.

10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நந்தினி நகர் கல்லூரி, அயோத்தியின் ராம் மனோகர் லோஹியா அவத் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பரந்து விரிந்த மைதானங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூப்பந்து மைதானத்துடன், கல்லூரியில் இணைந்திருக்கும் பல்கலைக்கழகத்தில் இல்லாத வசதிகள் கூட இந்த கல்லூரியில் உள்ளன. கல்லூரி வளாகத்தில் ஐந்து பாய்கள் கொண்ட அதிநவீன 'நேஷனல் மல்யுத்த அகாடமி', இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் சிறிய இரண்டு பாய் அகாடமி, கேலரி மற்றும் விளையாட்டு போட்டியை பார்க்கும் பகுதியுடன் கூடிய பெரிய ஆடிட்டோரியம் ஆகியவையும் உள்ளன.

publive-image

விஷ்னோஹர்பூரில் உள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் வீட்டின் பின்புறத்தில் ராபின்சன் R-66 டர்பைன் ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் மூத்த தேசிய தரவரிசை மல்யுத்த போட்டியை நடத்தினார். ஆனால் சிங்கின் ஐந்து மேட் அகாடமி அதன் ஏ.சி வசதியுடன் கூறி கேலரிகள் மேலிருந்து பார்க்கும்போது தரையின் பறவைக் காட்சியை கொடுக்கும் என்பது இந்த இடத்தின் பெருமை உள்ளது. இந்த அகாடமியின் பயிற்சியாளர்களில் அலெக்சாண்டர் ஷோரென்கோவும் உள்ளார்,  ஷோரென்கோ இன்னும் ஹிந்தி கற்றுக்கொள்ளாத நிலையில், மல்யுத்த சம்மேளனம் (WFI) மூலம் தான் அழைத்து வரப்பட்டதாகவும், மாதம் $2,000 சம்பளம் பெறுவதாகவும், செப்டம்பரில் அவரது ஒப்பந்தம் முடிவடைகிறது என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பயிற்சியாளரான பிரேம் சந்த் யாதவ் கூறுகையில், இரண்டு அகாடமிகளிலும் 100 மாணவர்கள் மற்றும் ஐந்து பயிற்சியாளர்கள் உள்ளனர். ஷோரென்கோ, ஒரு அட்ஹாக் பயிற்சியாளர், ஒருவர் கெலோ இந்தியாவால் நிதியளிக்கப்பட்டவர் மற்றும் கல்லூரியின் இரண்டு "தனிப்பட்ட பயிற்சியாளர்கள் உள்ளனர். யாதவ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் நவீன் சிங் ஆகியோரும் உள்ளனர். அதே சமயம், பாலியல் குற்றச்சாட்டு வெளியாவதற்கு முன்பு, மற்ற சிறந்த மல்யுத்த வீரர்களைத் தவிர, பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் கல்லூரிக்கு அடிக்கடி வந்து பயிற்சிக்காக வளாகத்தில் தங்கியிருப்பார்கள்.

publive-image

கோனார்ட் செவிலியர் மற்றும் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி

மல்யுத்த அகாடமியிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில், பூஷன் மற்றும் அவரது மருமகள் ராஜ்ஸ்ரீ சிங்கின் புகைப்படங்களைக் கொண்ட சமீபத்தில் முடிவடைந்த கிசான் சமரோவின் ஹோர்டிங்குகள் மற்றும் நீச்சல் குளம் உள்ளது. 2018-ம் ஆண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த நீச்சல் குளத்தை திறந்து வைத்தார். தற்போது கோடை விடுமுறைக்காக கல்லூரி மூடப்பட்டு, மாணவர்கள் குறைவாகவே உள்ளனர்.

publive-image

விஷ்னோஹர்பூரில் உள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் வீட்டில் வாகன நிறுத்துமிடம்

கல்லூரி வாசலில் இருந்து வெளியே வரும்போது, ஒரு சில மாணவர்கள் டெல்லியில் சமீபத்தில் நடந்த மல்யுத்த வீரர்களின் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுகிறார். "நாங்கள் அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் யாரும் இங்கே அதை பற்றி விவாதிக்கவில்லை. நான் ஒரு வருடமாக இந்த வளாகத்தில் இருக்கிறேன், இதுபோன்ற எந்த சம்பவத்தையும் நான் கேள்விப்படவில்லை என்று பீகாரைச் சேர்ந்த பிசிஏ இரண்டாம் செமஸ்டர் மாணவியான குஷி சிங் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் உள்கட்டமைப்பு மிகவும் நன்றாக உள்ளது, பல ஆண்டுகளாக, கல்லூரி பல விளையாட்டு முகாம்களை நடத்தியது. எங்களிடம் இந்த பகுதிகளிலிருந்து மட்டுமல்ல, பீகார் மற்றும் நேபாளத்திலிருந்தும் மாணவர்கள் உள்ளனர் என்று அக்கல்லூரியின் முதல்வர் பி.எல். சிங் கூறியுள்ளார்.

publive-image

விஷ்னோஹர்பூரில் உள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் வீட்டில் உடற்பயிற்சி கூடம்.

நவாப்கஞ்சில் நந்தினி நகர் சட்டக் கல்லூரி, நந்தினி கல்வி நிறுவனம், நந்தினி நகர் பிஜி கல்லூரி, நந்தினி நகர் மருந்தியல் கல்லூரி, பொறியியல் மற்றும் மேலாண்மைக்கான நந்தினி நகர் தொழில்நுட்ப வளாகம், மகளிர் கல்விப் பயிற்சிக் கல்லூரி, 100 படுக்கைகள் கொண்ட கோனார்ட் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், தி. கோனார்ட் செவிலியர் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி, மற்றும் சந்திர பான் சிங் இண்டர் காலேஜ் மற்றும் விபின் பிஹாரி பாலிகா மத்யாமிக் பள்ளி இவை அனைத்தும் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் நிறுவப்பட்டது. இந்த கல்லூரிகள் அனைத்தையும் அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

publive-image

பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் வீட்டிற்கு வெளியே, தொழுவமும் 70 பசுக்களுக்கான கொட்டகையும் உள்ளன

தொடர்ந்து அருகில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் ஏழு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும், பஹ்ரைச் மாவட்டத்தில் எட்டு மற்றும் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் மூன்று பள்ளிகளையும் குடும்பம் சொந்தமாக நடத்தி வருகிறது. நந்தினி நகர் கல்லூரியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் சிங்கின் முன்னோர்கள் கிராமமான விஷ்னோஹர்பூர் உள்ளது. அயோத்தியில் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள ஜூன் 5 பேரணியின் சுவரொட்டிகள் கிராமத்திற்குச் செல்லும் சாலையின் இருபுறமும் இன்னும் உள்ளன.

publive-image

விஷ்னோஹர்பூரில் உள்ள குடும்ப இல்லத்திலிருந்து 45 கி.மீ தொலைவில் கோண்டாவில் உள்ள பரஸ்பூரில் உள்ள மகாகவி துளசிதாஸ் பிஜி கல்லூரி உள்ளது,

இங்குள்ள சிங்கின் வீடு, பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டமைப்பாகும், அதில் அழகுபடுத்தப்பட்ட தோட்டங்கள், ஒரு ஸ்வாங்கி ஜிம், மற்றும் ஒரு ராபின்சன் R-66 டர்பைன் ஹெலிகாப்டர் நிறுத்தும் இடத்துடன் கொண்ட பெரிய வாகன நிறுத்துமிடம் ஆகியவை உள்ளன. இங்கிருந்து 2-3 நாட்களுக்கு ஒருமுறை ஹெலிகாப்டர் புறப்படும் என்று காப்பாளர் கூறுகிறார். வீட்டிற்கு வெளியே, ஒரு ஏரியின் குறுக்கே, ஒரு தொழுவமும், 70 மாடுகளுக்கான கொட்டகையும் உள்ளன. இரண்டு குதிரைகள் உள்ளது. இதில் ஒரு குதிரையில் சிங் அடிக்கடி சவாரி செய்வதாக கொட்டகையின் பராமரிப்பாளர் கூறுகிறார். வீட்டிலிருந்து 45 கிமீ தொலைவில் கோண்டாவில் பகுதியின் பரஸ்பூரில் உள்ள மகாகவி துளசிதாஸ் பிஜி கல்லூரி உள்ளது, இது சிங்குடன் தொடர்புடைய மற்றொரு நிறுவனமாகும்.

ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு, தன் தோழிக்காகக் காத்திருந்த பிஏ முதலாம் ஆண்டு மாணவி அங்கிதா பாண்டே என்பவர்  சிங் மற்றும் மல்யுத்த வீரர்களைச் சுற்றியுள்ள சர்ச்சைகளைப் பற்றி கேள்விப்பட்டதாகக் கூறுகிறார். ஆனாலும் “நாங்கள் கல்லூரியில் இது பற்றி விவாதிக்கவில்லை. நாங்கள் எங்கள் கல்வி பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம். ஆனால் நான் கல்லூரிக்கு நடந்து செல்வதால் இதையெல்லாம் கேட்கும் போது என் பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் இப்போது எனக்கு ஒரு மொபைல் போன் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment