Advertisment

மணிப்பூர் சர்ச்சை வீடியோவை அகற்ற வேண்டும் : சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை

மணிப்பூரில் குக்கி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட வீடியோ வைரலானது.

author-image
WebDesk
New Update
Manipur

Tamil News live

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. அரசின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இந்த வீடியோவைப் பகிர்ந்த சில ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisment

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பெரும் கலவரம் வெடித்து வரும் நிலையில், மக்கள் அனைவரும் தங்களது இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஆதரவின்றி தவித்து வருகின்றனர். இந்த கலவரங்கள் குறித்து அவ்வப்போது பத்திரிக்கைகளில் மற்றும் இணையதளங்களில் வெளியாகி வரும் தகவல்கள் மற்ற மாநில மக்களுக்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தில் குக்கி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஆண்களின் கும்பல் நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே மணிப்பூரில் பெரும் கலவரம் வெடித்து வரும் நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருவதால் மேலும் கலவரம் அதிகரிக்கும் என்று அச்சுறுத்தல் உருவானது. இதனால் இந்த வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை ஏற்கனவே அச்சுறுத்தலில் இருக்கும் நிலையில், இந்த வீடியோ மேலும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து சமூகவலைதளங்களின் சார்பில் இந்த வீடியோவை அகற்ற சில இணைப்புகள் பகிரப்பட்டுள்ளன," என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000ன் பிரிவு 69 (A) இன் கீழ் சமூக ஊடக நிறுவனங்களுக்கு பகிரப்பட்ட பதிவுகளை அகற்றுவதற்கான உத்தரவுகளை வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த வைரல் வீடியோவில் உள்ள சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது, மேலும் காங்போக்பி மாவட்டத்தில் மே 18 அன்று இந்த நடந்த இந்த சம்பவம் குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஏகே ரைபிள்கள், எஸ்எல்ஆர், இன்சாஸ், 303 ரைபிள்கள் போன்ற அதிநவீன ஆயுதங்களை ஏந்திய 800-1,000 பேர் கொண்ட கும்பல் மே 3-ம் தேதி பிற்பகலில் தங்கள் கிராமத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, கிராமத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் என ஐந்து பேர் காட்டை நோக்கி ஓடிவிட்டனர். பின்னர் அவர்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரும் வழியில், காவல் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து அவர்கள் கடத்தப்பட்டதாக என்று பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மணிப்பூரின் நிலைமை குறித்து பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது இதயம் "வலி மற்றும் கோபத்தால்" நிறைந்திருப்பதாகக் கூறியுள்ளார். "மணிப்பூரில் வெளிச்சத்திற்கு வந்துள்ள சம்பவம் எந்த நாகரீக சமுதாயத்திற்கும் வெட்கக்கேடான சம்பவம். நான் வேதனையாலும் கோபத்தாலும் நிறைந்துள்ளேன். மணிப்பூரின் சம்பவம் சமூகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. மணிப்பூரின் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்கவே முடியாது, குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்,” என்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இணையத்தில் வெளியான வீடியோ தொடர்பான வழக்கில், மாநில காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளதாக மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் கூறினார். மேலும் "வீடியோ வெளியான உடனேயே இந்த சம்பவம் குறித்து தானாக முன்வந்து அறிந்த பிறகு, மணிப்பூர் காவல்துறை நடவடிக்கை எடுத்து இன்று காலை ஒருவரை கைது செய்தது," என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"தற்போது ஒரு முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம், நம் சமூகத்தில் இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு முற்றிலும் இடமில்லை என்பதை தெரியப்படுத்துங்கள், ”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Manipur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment