அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு நிதியுதவி உடன் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக, அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். இரு நாட்டு உறவு மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்- மோடி இருவரும் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது கையெழுத்தானது.
மோடியின் இந்த அமெரிக்க பயணம் மிகவும் முக்கியமானது. இது ஒரு மைல்கல் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி நேற்று பேசுகையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும். மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்றார்.
மேலும், இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு நன்றி. இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை ஜோ பைடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்த செல்ல முயல்கிறார். இந்தியர்களின் பணிக்காக வழங்கப்படும் எச்1 பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம் என்று கூறினார்.
இந்தியா- அமெரிக்கா கூட்டறிக்கையில் பிரதமர் மோடி கூறுகையில், "இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். இந்தியாவில் கூகுளின் ஏ.ஐ ஆராய்ச்சி மையம் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படுகிறது. இந்திய அரசின் உதவியுடன், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவப்படும் என்றார்.
இந்தியாவில் முடிந்தவரை முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். இந்தியாவில் கூகுளின் AI ஆராய்ச்சி மையம் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் வேலை செய்யும். இந்திய அரசின் உதவியுடன், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவப்படும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் பிரதமர் மோடி பேசுகையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றார்.
மேலும், ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலை மேம்படுத்த சிகாகோ பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் இருக்கை மீண்டும் நிறுவப்படும் என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“