எரிபொருள் விலை உயர்வு : மத்திய அரசுக்கு எதிராக ராகுல்காந்தி சைக்கிள் பேரணி

Rahul Gandhi Cycle Rally Update : பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சி எம்பிக்களுடன் ராகுல்காந்தி சைக்கிள் பேரணியில் ஈடுபட்டார்.

Congress MP Rahul Gandhi Cycle Rally to Parliament : இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்பியுமான ராகுல்காந்தி, எதிர்கட்சி எம்பிக்களுடன் நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.  

பெகாசஸ் மென்பொருள் விவகாரம், கோவிட் -19 தொற்றுநோயைக் கையாளுதல் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி ராகுல்காந்தி தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா, என்சிபியின் சுப்ரியா சூலே, சிவசேனாவின் சஞ்சய் ராவத் மற்றும் திமுகவின் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி கூறுகையில், உங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கமாகும். இந்தக் குரல் எவ்வளவு அதிகமாக ஒன்றிணைகிறதோ, அவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கும், இந்தக் குரலை ஒடுக்குவது பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு மிகவும் கடினமாக இருக்கும். “ஒற்றுமையின் அடித்தளத்தை நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், இப்போது நாம் இந்த அறக்கட்டளையின் கொள்கைகளைக் கொண்டு வரத் தொடங்குவது முக்கியம் என கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “எரிபொருள் விலையை பொறுத்தவரை, இந்திய மக்கள் சிரமப்படுகிறார்கள், நாங்கள் இங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றால், அது தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறிய ராகுல்காந்தி ஆலோசனைக்கு பிறகு அவரது தலைமையிலான பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எரிபொருள் விலை உயர்வு, பெகாசஸ் மென்பொருள் விவகாரம், விவசாயிகள் சட்டம் ஆகிய  பிரச்சினைகளுக்கு எதிரான குரல் கொடுக்கும் வகையில், நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணியில் ஈடுபட்டார். ஏற்கனவே விவசாய சட்டத்திற்கு எதிராக ராகுல்காந்தி கடந்த வாரம் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டார்

இதற்கிடையில், பாராளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் போராட்டங்கள் நடந்ததால், எதிர்க்கட்சிகளை தாக்கி பாராளுமன்றத்தில் பேசிய , பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை செயல்பட விடவில்லை. இது ஜனநாயகத்தையும் பொதுமக்களையும் அவமதிக்கும் செயலாகும் என்று கூறினார். எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்த அதே நேரத்தில் பாஜக பாராளுமன்ற கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்ல் பிரதமர் மோடி பேசியது குறித்து கூறிய வெளி விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடத்தைக்கு பிரதமர் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும், காகிதங்களை கிழித்து எறிந்தவர்கள் தங்களது செயலுக்கு வருத்தப்படாமல் இருப்பதாகவும் இது அவர்களின் ஆணவத்தை காட்டுகிறது ஏன்று கூறிய மோடி தனது கட்சி உறுப்பினர்களை நிதானத்தை இருக்குமாறு அறிவுறுத்தியதாக கூறியுள்ளார்.

பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில் ஐடி அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவின் அறிக்கையை ராஜ்யசபாவில் ஒரு டிஎம்சி உறுப்பினர் கிழித்தபோது, ​​பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் காகிதங்களை கிழித்து நாற்காலியை நோக்கி வீசினர். பாராளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதத்தை விமர்சித்த டிஎம்சி தலைவர் டெரெக் ஓ பிரையனின் ட்வீட் பிரதமர் மோடிக்கு கோபத்தை வரவழைத்தது எள்றும், ஜோசியும் மற்றொரு மத்திய மந்திரி வி முரளீதரனும் செய்தியாளர்களிடம், டிஎம்சி உறுப்பினரின் பெயரை குறிப்பிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் தனது “முதல் 10 நாட்களில் மோடி-ஷா விரைந்து சென்று 12 மசோதாக்களை சராசரியாக ஒரு மசோதாவுக்கு ஏழு நிமிடங்களுக்குள் நிறைவேற்றினார். பாப்ரி சாட் செய்வது போல சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். சட்டத்தை நிறைவேற்றுவது அல்லது இத்தகைய கருத்துக்கள் பாராளுமன்ற நடைமுறை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மரியாதைக்கு “கீழ்த்தரமானவை” என்று முரளிதரன் மோடியை மேற்கோள் காட்டி கூறினார்.

எதிர்க்கட்சிகளின் நடத்தை பாராளுமன்றத்திற்கும் அரசியலமைப்பிற்கும் ஒரு அவமதிப்பாக உள்ளது என்று பிரதமரை மேற்கோள் காட்டி கூறியுள்ள ஜோஷி அவர்கள் “ஜனநாயக விரோத” அணுகுமுறை கொண்டவர்கள் என்று மோடி குற்றம் சாட்டினார், மேலும் அவர்கள் அர்த்தமுள்ள விவாதங்களில் ஆர்வம் காட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil congress mp rahul gandhi cycle rally to parliment with opposition mps

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com