இந்திய பாதுகாப்பு நிறுவனம் உருவாக்கிய கொரோனா எதிர்ப்பு மருந்து: மத்தியஅரசு அனுமதி

Covid 19 Vaccine : 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் மருத்துவ பரிசோதனைகள் இது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக குணப்படுத்த உதவுகிறது

இந்தியாவில் கொரோன தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து வருகிறது. இதில் ஒருபுறம் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து செலுத்த்பபட்டு வரும் நிலையில், கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பு மருந்து பற்றக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அவசரகால தடுப்பு மருந்தாக மருத்துவக்குழு பல மருந்துகளை பரிந்துரை செய்து அனுமதி வாங்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடுமையான கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மிதமான முறையில் துணை சிகிச்சையாக அவசரகால பயன்பாட்டிற்காக டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய கோவிட் எதிர்ப்பு வாய்வழி மருந்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் மருத்துவ பரிசோதனைகள் இது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை விரைவாக குணப்படுத்த உதவுகிறது மற்றும் துணை ஆக்ஸிஜன் சார்புநிலையை குறைக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னணி ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.

2-டிஜி தூள் வடிவில் சச்செட்டில் இருக்கும் இந்த மருந்தை தண்ணீரில் கரைப்பதன் மூலம் வாய்வழியாக எடுக்கப்படுகிறது. மேலும் இந்த மருந்தை “மே 01 அன்று, டி.சி.ஜி.ஐ அவசரகாலமாக கடுமையான கோவிட் -19 நோயாளிகளுக்கு துணை சிகிச்சையாக பயன்படுத்த அனுமதி வழங்கியது. குளுக்கோஸின் பொதுவான மூலக்கூறு மற்றும் அனலாக் என்பதால், இதை எளிதில் உற்பத்தி செய்து நாட்டில் ஏராளமாக கிடைக்கச் செய்யலாம் ”என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் குவிந்து வைரஸ் தொகுப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் வைரஸ் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் வைரஸ் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் அதன் அதன் அதிகரிப்பை தடுப்பதல் இந்த மருந்து தனித்துவமாக்குகிறது, ”என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil covid vaccine update dcgi approves anti covid drug

Next Story
24 மாநிலங்களில் 15% ஆக உயர்ந்த கோவிட் தொற்று விகிதம்Over 15% positivity in 24 states, cases trending steeply up in 30 districts
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com